PULP FICTION
இந்த பெயரில் ஒரு ஆங்கிலப்படம் இருப்பதே எனக்கு என் நண்பன் சொல்லித்தான் தெரியும். அது நான் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊரைச்சுற்றிகொண்டிருந்த காலம்(2005). நாங்கள் சென்னையில் கோட்டுர்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம். அந்த நாட்களில் எனக்கு ஆங்கிலப்படங்களின் மீது அதிக ஈர்ப்பு இருந்திருக்கவில்லை.
“மச்சி! நீ நாளைக்கு ப்ரீதான?. எனக்கு ஒரு படத்தோட CD வேணும். நான் பார்த்த எங்கயும் கெடைக்கல. நீ நாளைக்கு தி நகர் போயிட்டு கொஞ்சம் வாங்கிட்டு வரியா?”(எங்கள் room இல் மொத்தம் மூன்று பேர். அதில் இரண்டு பேர் வேலைதேடிக்கொண்டிருந்த காரணத்தால், எங்களிடம் broadband connection அப்போது இல்லை)
“சரிடா! படம் பேரு என்ன?
1. PULP FICTION(1994)
2. TAXI DRIVER(1976)
மறுநாள் காலையில் நான் தி நகரில்(சமுதாய நல சங்கம்). உலகத்திலுள்ள அத்தனை படங்களின் CD/DVD க்கள் இங்கே கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றேன்…
அங்கே உள்ள எல்லா CD கடைகளிலும் கேட்டுவிட்டேன். அங்கே கிடைத்த பதில்கள் இதோ,
“Pulp Fiction ஆ!… அப்படின்னா?”
“புதுப்படமா இருக்கும்!. CD இன்னும் வரல, ஒரு வாரம் கழிச்சு வா”
“இல்ல….”
“இல்ல………”
“வேற எங்கயாவது கேளு”
“வெறும் படம் பேரு மட்டும் சொன்ன எப்படி!….director பேரு actor பேரு எல்லாம் எடுத்துட்டு வா….தேடிடலாம் ”
“உன் ப்ரண்ட் கிட்ட படம் பெற கரெக்ட் ஆ கேளுப்பா. நீ சொல்ற ரெண்டு படமும் இங்கிலீஷ் ல இல்ல(அவர்தான் படங்களுக்கு IMDB ரேடிங் தருவதை போல பேசினார்)
“ஹீ ஹெஈ!…..அது டாக்ஸி டிரைவர் இல்ல….படம் பேரு ‘TAXI’ ஹிந்தி படம். 40 ரூபா CD…..உன் ப்ரண்ட் உன்கிட்ட தப்பா சொல்லிட்டான்”
என் நண்பன்மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக நான் அந்த கடையிலிருந்து வெளியேறினேன்
Last shop
“இங்க CD எல்லாம் அவ்ளோ வரதில்ல தம்பி……..போலீஸ் ரெய்டு ….நீ எதுக்கும் பாரிஸ் கார்னர்ல பாரு… அங்க கிடைக்காத படமே இல்ல”. அதை என் நண்பனிடம் போனில் தெரிவித்தேன்…
“ஒ! அப்டியா! அங்கயும் ஒரு எட்டு போயிட்டு வந்துடேன்……அப்படியே presidency ல ஒரு application form……. ப்ளீஸ்……..பாட்டரி கம்மியா இருக்கு….நான் அப்புறம் போன் பண்றேன்” அவன் கெஞ்சியபின் என்னால் தட்டமுடியவில்லை.
அங்கேயும் அதே பதில்கள்தான் கிடைத்தன………ஒரே ஒரு கடையை தவிர
“அண்ணா! Pulp fiction படம் இருக்க?” நான்
“ஹ்ம்ம்! இருக்கு!
Wow! Finally I got it!(thank to that last shop owner)
நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.....சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஒரு DVDயை (ஒரு முறை சுற்றி யாரும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டு) என் கையில் திணித்தார்.
புதுசு தம்பி…செம டிமான்ட்….இது ஒரே ஒரு DVDதான் இருக்கு. 100 ரூபா குடு.
ஆனால் spelling வேறாக இருந்தது. என் நண்பனின் மீது எனக்கு இருந்தா நம்பிக்கை போய்விட்டது(படுபாவி! Spellingஅ தப்பா எழுதிகுடுத்துட்டான்). நாம் சில நேரங்களில் யாரோ ஒருவரை நம்புகிறோம். ஆனால், நம் உறவினர்களை/நண்பர்களை நம்ப மறுக்கிறோம்.
“அண்ணே! என்ன ஸ்டோரி.”
“ஸ்டோரியா? பிட்டு படத்துல ஏதுப்பா ஸ்டோரி”
படத்தின் பெயர் இதோ
Pal fixation (Pal & Piya xxx)
“???????????????????” நான்.