Friday, April 22, 2011

குறும்படமும் குவாட்டர் வோட்காவும்

ஒரு ஷாட் பிலிம் எடுக்கனும்?     
   
இந்த எண்ணம் எப்போது உதித்தது? ‘காதலில் சொதப்புவது எப்படி, அமுதாபோன்ற படங்களை பார்த்த போதா? கனவிலாஆபிசில் வேலை இல்லாமல் இருக்கும்போதா?   இல்லை மடிவாலா பஸ் ஸ்டாண்டில் அந்த பிகருடன் பானிபூரி சாப்பிடும்போதா? தெரியவில்லை. ஆனால் உதித்தது.
ஷாட் பிலிம் எப்படி எடுப்பது?  சிறிது யோசனைக்குப்பின் பேப்பரும் பேனாவும் என் கையில்.

குறும்படம் எடுக்க தேவையான பொருட்கள்:
கேமரா

ஓசி கேமரால எடுத்தாதான் படம் நல்லா வரும்.

கதை & காமெடி
                                                           
தேவையான அளவு

                                                       
இசை

ஒரு டீஸ்பூன்.....மன்னிக்கவும்.....தேவையான அளவு. இதுக்குதான் என்ன பண்றதுன்னு தெரியலபாத்துக்கலாம்

பல இரவுகள் யோசித்தபின் ஒரு அருமையான கதை என் மனதில் உருவானது. எல்லாவற்றையும் எடுத்துகொண்டு  என் அறை நண்பர்களிடம் ஆலோசனை கேட்க சென்றேன்எல்லோர்முன்னும் கேட்டால் 'போர்வையை போர்த்தி அடி விழும்' ஆபத்துக்கள் இருப்பதால் தனித்தனியாக சம்மதம் கேட்க முடிவு செய்தேன்

நாங்கள் வசிப்பது மடிவாலாவில்  உள்ள ஒரு தீபகற்பவீடு(என்னாதுதீபா கர்ப்பமா?). அதாவது மூன்று பக்கம் லேடிஸ் ஹாஸ்டல்களாலும் ஒரு பக்கம் மளிகை கடையாலும் சூழப்பட்ட ரம்மியமான வீடு. அந்த வீட்டில் என்னையும் சேர்த்து மொத்தம் 6 பேர் வசிக்கிறோம். இதில் என்னைத்தவிர மற்ற எல்லோரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்.
                                                          

"இந்த ABAP, ABAP னு சொல்றீங்களே! அப்டின்னா என்னடாஏதாவது கம்பெனி பேரா? நான்.
சில நேரங்களில் நான் இதைபோல் அவமானமும் பட்டதுண்டு

நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் எங்களுக்குள் அடிக்கடி குத்துச்சண்டை நடைபெறும்(குத்துச்சண்டையின் விதிமுறை கூட எங்களுக்கு சரியாக தெரியாது).


குத்துச்சண்டை போட்டியாளர்கள் முறையே
அசோக்(நான்) Vs தீபக் 
கௌதம் Vs கண்ணன்(மாடி
சரி கதைக்கு வருவோம். முதலில் தீபக்.....

"தீபக்! ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்நீ ப்ரீயா? என்ன சொல்ற?" நான்

சாரிடா! ! I am in tight schedule you know(டைம் டேபிள் போட்டு வொர்க் பண்றமாதிரிதான்). என் கேர்ள்ப்ரண்ட் வேற என்ன உடம்ப குறைக்க சொல்லியிருக்கா? அதனால கஷ்டம். வேற ஆளப்பாரு” தீபக்

சத்தியமா உனக்கு உடம்பு குறையாதுடா” என்று சொல்லிவிட்டு  அவன் பதிலை எதிர்பார்க்காமல் அடுத்தவனிடம் சென்றேன்.

“ரமேஷ்! ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்ற?”

“நல்ல விஷயந்தான். வெட்டியா இருக்கறதுக்கு இது மாதிரி ஏதாவது செய்யலாம்ஆனா எனக்கு நடிக்க வராதே!” ரமேஷ்.


"நீ இந்த படத்துக்கு மியூசிக் பண்ணு" அவன் முறையாக சங்கீதம் கற்று கீபோர்ட், கிடார் போன்ற வாத்தியங்களை கற்றுள்ளான்

"இப்ப எனக்கு மீட்டிங் இருக்கு. இதபத்தி நாம கண்டிப்பா டிஸ்கஸ்  பண்ணலாம்" ரமேஷ்

“ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேல? நானே எங்க கம்பெனில onsiteகுடுக்கலையேன்னு கடுப்புல இருக்கேன். இங்க வந்து குறும்படம், குப்பைத்தொட்டின்னு பேசுறீங்க. போங்க அந்த பக்கம். போய் வேற வேலஇருந்தா பாருங்க” -  மாடி வீட்டு கண்ணன்


"அப்படியா? சரி பண்ணலாம். ஆனா  ஒரு கண்டிஷன். நான் பாத்ரூம்ல இருந்துவெளிய வர மாதிரி ஒரு சீன் வைக்கணும்” - சுந்தர்


“ ராஜ். நீ என்னடா சொல்ற?” நான்


“ஏதோ சொல்றீங்க. கதை நல்ல இருந்தா நான் ரெடி” ராஜ்.


ஓரளவு எல்லோரும் சரி என்று சொன்னதும் கதையின் நாயகனானகௌதமிடம் கேட்க சென்றேன். அவனை நாங்கள் செல்லமாக 'பெரியண்ணா' என்றும் அழைப்பதுண்டு. இவனைப்பற்றி மட்டும் ஒரு சின்ன பிளாஷ்பேக்.

"கௌதம்! எனக்கு நாளைக்கு ஒரு இண்டர்வீயு இருக்கு. கொஞ்சம் ஃஹெல்ப் பண்றீங்களா?" - கார்த்திக்.(கார்த்திக் எங்கள் ரூமிற்கு ரெகுலராக வரும் விசிட்டர்).
"என்ன ப்ரோபைல்?" - கௌதம்


“எல்லாம் நம்ம வொர்க் பண்ற ப்ரோபைல்தான்”  கார்த்திக்
 
சரி! Full form of SAP when was SAP started?” கௌதம்    

"அப்டின்னா? ஐயோ எனக்கு தெரியாதே!" கார்த்திக்.                




“What is infospoke?”
“ஐயோ! கௌதம் என்ன சொல்றீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” கார்த்திக்

“what are the types of DSos?” கௌதம் 

“????????????????????”கார்த்திக்

“what is BW?” கௌதம்

“????????????????????????????????????????????????????”கார்த்திக்

இதெல்லாம் SAP ல ரொம்ப முக்கியமான கேள்வி. இது தெரியாம நீங்க எந்த இண்டர்வீயுவும் க்ளியர் பண்ண முடியாது. கௌதம் இன்னும் பலகேள்விகளை கேட்டு கார்த்திக்கை  குழப்பிக்கொண்டிருந்தான்.  


மறுநாள்

“Hi karthik! How was your interview?” நான்.

"ஃகான்பிடண்ட்டோடதான்  இருந்தேன். கௌதம்கிட்ட டிஸ்கஸ் பண்ணதுக்கு அப்புறம் கான்பிடண்ட் போய்டிச்சு. அதனால இண்டர்வீயு போகல" - கார்த்திக். அருகில் கௌதம் குறட்டைவிட்டுதூங்கிகொண்டிருந்தான் (இவனுக்கு அடுத்தவங்கள குழப்புறதே வேல).



நான் இவனிடம்தான் சம்மதம் பெற்று படத்தை எடுக்கவேண்டும்.


"ஊர்ல  ஒன்னு சொல்லுவாங்க?" கௌதம்

"என்னடா?" - நான் 


"வேலில ஏறி ஓணான் பிடிக்க தெரியாதவன், வானத்துல ஏறி நிலாவபிடிப்பேன்னு சொன்னானாம்." கௌதம்


"டேய்! இத உனக்கு சொன்னதே நான்டா" நான்


உனக்கு ஒரு போட்டோவே ஒழுங்கா எடுக்கதெரியாது. நீ படம் எடுக்கப்போறியா? கௌதம்.

"நீ வேணும்னா கேமராமேனா இருடா! நம்ம ஒரு நல்ல படம் பண்ணலாம்" நான்




"இதப்பாரு அசோக்! நீ நினைக்கிற மாதிரி இல்ல. குறும்படம்னா ஒரு விஷயத்த ஆழமா பதியுற மாதிரி பத்தே நிமிஷத்துல சொல்லணும். 
நீ கேமரா எந்த ஆங்கிள்ள செட் பண்ணுவ? என்ன ஸ்க்ரீன்ப்ளே? எடிட்டிங் எப்படி பண்ணுவ? இதெல்லாம் தெரியாம நீ படம் எடுக்க முடியாது. அப்படியே நீ சரியா பண்ணாலும் நடிக்கறவங்க நல்லா நடிக்கணும். அதுதான் முக்கியம்.

"சரி! யாரு நடிக்க போறா?" கௌதம்


"நம்ம ரூம்மேட்ஸ்தான்"


"க்கும்! வெளங்கிடும். என்ன கதை வச்சிருக்க?" கௌதம்

“சைக்கோ த்ரில்லர்"

"சுத்தம்! சரி விடு!...........நான் ஹெல்ப் பண்றேன்..........ஒரு பீர், குவாட்டர் வோட்கா, சிக்கன் எல்லாம் ரெடி பண்ணிட்டு நைட் டிஸ்கஸ் பண்ணலாம்.ஓகே வா? கௌதம்


"இந்த உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேண்டா" அவன் இதற்கு ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம் என்பதால் இரவு நடக்கப்போகும் பயங்கரத்தை அறியாமல் அவனுடன் ஒயின்ஷாப் சென்றேன்




டிஸ்கஸன்


"கண்ணா! என்னடா அப்படி பாக்குற? சரக்கு அடிக்கறதும் ஒரு வகையான தியானம்தாம்" கௌதம்.


வோட்கா ஒரு ரவுண்ட் முடிந்தவுடன்


"உங்க கதை என்ன? நல்லா தெளிவா சொல்லுங்க" ரமேஷ்


"ஷாட் ஓபன் பண்ணா....................." நான்


"எனக்கொரு ஓபனிங் சாங்" கௌதம்


"எனக்கொரு பைட்" ராஜ்


"எனக்கொரு ரேப் சீன்" சுந்தர்.




"டேய்! நம்ம எடுக்கபோறது ஷாட் பிலிம்டா. கமர்சியல் பிலிம் இல்ல. அதுவும்இல்லாம சரக்கு அடிச்சவன்களே அமைதியா இருக்கும்போது, கொயால! sprite  குடிச்சிட்டு உனக்கு ரேப் சீன் கேக்குதா"  நான்.  




"அசோக்! ஒரு ஷாட் பிலிம் எப்படி எடுக்கணும்னா...................................." கண்ணன்


"சொறி பிடிச்ச மொன்ன நாயே! உனக்கு ஷாட் பிலிம் பத்தி என்ன தெரியும்?" கௌதம்


"எனக்கு தெரியாதுன்னு உங்களுக்கு தெரியுமா?" கண்ணன்


அவர்கள் இருவருக்கும் வழக்கம் போல் குத்துச்சண்டை ஆரம்பித்தது.


"ஷாட் பிலிம்ம விட்ரா! நம்ம கம்பெனி பத்தி உனக்கு என்ன தெரியும்? மூணுவருசமா வேல செய்றியே. நம்ம கம்பெனி MD  பேர் தெரியுமா?


"எனக்கு தெரியாது. தெரியணும்னு அவசியமும் இல்ல. அவன் பாரின்ல இருக்கான். நான் வேல செய்றேன். சம்பளம் தராங்க. அவ்ளோதான். நான் எதுக்கு அவன் பேரு தெரிஞ்சுக்கணும்" கண்ணன்

"நம்ம ஆபீஸ் பஸ்ல மொத சீட்ல உக்கார்ற பொண்ணு பேரு என்ன?" ரமேஷ்

“carien du toit” 

"அவ பேரு மட்டும் ஏன் தெரிஞ்சுவச்சிருக்க. ஏன் கம்பெனி MD பேரு தெரில" ரமேஷ்



நான் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க, மீதி நால்வரும் கண்ணனை பிடித்து பிழிந்துகொண்டிருந்தனர். நான் கூறுவதை யாரும் கேட்பதைப்போல் தெரியவில்லை. இவர்களின் தொல்லை தாங்காமல் அரை மணிநேர போராட்டத்திற்குபின் கண்ணன் அவர்களிடம் சரணடைந்தான்.


"
ஓகே. MD பேருபெரோஸ். போதுமா?" கண்ணன்.


அவனை கொடுமைபடுத்திய சந்தோசத்தில் மீதியிருந்த பீரையும் காலி செய்தனர் நண்பர்கள்.


"
ஷாட் ஓபன் பண்ணா............................." நான்


"
டேய் பாடு! உன் கதைய தூக்கி குப்பதொட்டில போடு. இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போய்கிட்டிருக்கு................................ஷாட் பில்மாவது........................வெங்காயமாவது...................................." கௌதம் 


"
டேய்சொல்றா......ஃபெரோஸ்க்கு ஸ்பெல்லிங் சொல்லு. *த்தா! இப்ப ஸ்பெல்லிங் சொல்லிட்டுதான் நீ வெளிய போற" கௌதம்.


கண்ணன் கையில் பாட்டிலும் கண்களில் பயருமாக கொலைவெறியுடன் எங்களை நோக்கினான்.


"
இன்னும் ஒரு வார்த்த பேசினீங்க. இங்க நடக்கறதே வேற" கண்ணன்


"
மச்சி! டேக் க்ஷன் சொல்லாமையே  பின்றியே!. நம்ம படத்துல நீதான் சைக்கோ.......சாரி....ஹீரோ......." நான்  


 "
போங்கடா நீங்களும் உங்க டிஸ்கசனும். நான் இனிமே இந்த ரூமுக்கே வரமாட்டேன்" சொல்லிவிட்டு ஒரு பீர் பாட்டிலையும் உடைத்துவிட்டு வெளியே சென்றான்.


பீரும் வோட்காவும் கலந்த வேதியியல் வினையில் என் குறும்படம் கேட்டலிஸ்ட்டாக உபயோகிக்கப்பட்டு முற்றிலுமாக கரைந்துபோனது.

அதன்பிறகு அதைப்பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. நான் எடுத்த சிறு சிறு முயற்சிகளும் வீணாயின. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றேன்.

இரண்டு மாதம் கழித்து,

அன்றுதான் அவனை முதலில் பார்த்தேன். புது ரூம்மேட். பேரு பிரபாகர். ஒரு சாயலில் பார்ப்பதற்கு பிரதாப் போத்தன் போல இருந்தான்.


இவனை வைத்து ஒரு படம் எடுக்கலாமா? வேண்டாம். என் நண்பர்கள்எதையாவது சொல்லி கலைத்துவிடுவார்கள்.


திடீரென ஒரு நாள்,


"ப்ரண்ட்ஸ்! நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாமா? என்கிட்டே ஒரு சூப்பர் கதை இருக்கு


“சைக்கோ த்ரில்லர்"  பிரபாகர்




Thursday, April 14, 2011

முதல் முத்தம்

“என்னடா ஆச்சு? ஏன் கை கால் எல்லாம்  அடி பட்டிருக்கு?” நான்
“எங்க கிளாஸ் அனிதா இல்ல!. அவளுக்கு நேத்து ஒரே ஒரு முத்தம்தான்டா குடுத்தேன். அவ நேரா எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா. அதான்! எங்க அப்பா என்ன அடி பின்னிட்டாரு!”
“அனிதா!!!!!  இருடி உன்ன வச்சிக்கிறேன்!” ராமு.
எங்கள் ஊரிலேயே ராமுதான் எனக்கு தெரிந்த ஒரே ப்ளே பாய். அவன் படிப்பது மெட்ரிகுலேஷன் பள்ளியாதலால் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பில் உண்டு. நானும் முத்துவும் படிப்பது அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நாங்கள்  மூவரும் 9 ம் வகுப்பின் தேர்வை முடித்துவிட்டு ரிசல்ட்க்காக காத்துக்கொண்டிருந்தோம்.  எங்கள் மூவரில் அவனுக்கு மட்டும் ஒரு தனி மரியாதை உண்டு.  அதற்கு காரணம் அவன் இதுவரை 19 பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டானாம்.

“சரிடா! பாக்கலாம்! எதிர்வீட்டு ஸ்டெல்லா இல்ல. அவளுக்கு நாளைக்கு பர்த்டேவாம். நான் போய்ட்டு அவளுக்கும் ஒரு முத்தம் குடுத்துட்டு வரேன்” சொல்லிவிட்டு  சந்தோசமாய் பறந்தான்.

அவன் சென்றதும் முத்து உடைந்துவிட்டான்.

“ச்சே! நம்ம செட்லயே ராமுதான்டா என்ஜாய் பண்றான். எங்கப்பாவும் உங்கப்பாவும் வேஸ்ட்டா…நம்மளயும் அந்த மாதிரி ஸ்கூல்ல சேர்த்திருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கலாம்”
“ஆமாடா! 15 வயசாச்சி! இன்னும் ஒரு பொண்ணுக்கு கூட முத்தம் குடுக்கல!" நான் 
எங்கள் இருவருக்கும் தேர்வு முடிவைவிட இதுதான் பெரிய கவலையாக இருந்தது.

“பாபு! இந்த லீவ் முடியறதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் யாராவது ஒரு பொண்ணுக்காவது முத்தம் குடுக்கறோம். அடி வாங்குறதபத்தி அப்புறம் யோசிக்கலாம். என்ன?”
“சரிடா! நான் ரெடி!” 

அவனிடம் சரி என்று சொல்லிவிட்டாலும் எனக்கு அது ரொம்ப கஷ்டமான வேலையாக இருந்தது.
“It’s a very difficult task you know!”
நான் குழப்பத்தோடு வீட்டுக்குள் நுழைய

“இதப்பாருங்க! ரெண்டு மாசம் லீவ். இந்த அராத்த வச்சி சமாளிக்க என்னால முடியாது. பேசாம பாபுவ எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுங்க!” என் அம்மா
“அது ஏனோ தெரியவில்லை! பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு எதிரிகளாகவே தெரிகிறார்கள்.

மறுநாள் பல அறிவுரைகளுக்குப்பின் தனியாக சிதம்பரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்தான் என் சித்திக்கு திருமணமானது. என் சித்தியும் பாட்டி வீட்டில்தான் இருந்தாள்.

“இந்தா 300 ரூபா..பாத்து செலவு பண்ணு. சரியா?..சிதம்பரத்துக்கு போனதும் ஒரு போன் பண்ணி சொல்லிடு. என்னடா முழிக்கிற? சரியா?” அப்பா.

ச்சே! இந்த ஊரிலாவது பக்கத்து வீட்ல செல்வி இருக்கா. நான் சிதம்பரத்துல போய் என்ன செய்ய?

“வாடா பாபு! எப்ப வந்தா! வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” இந்த ஒரே கேள்வியை  எல்லாரும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  எனக்கு உறவுமுறைகள் பற்றி தெரியாததால் என் சித்தி அருகிலிருந்து உதவி செய்தாள். ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தயங்கி தயங்கி வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

“என்னடி முழிக்கிற! யாருன்னு தெரிலையா? உன் மாமா! பேரு பாபு!” என் சித்தி

அவள் என் சித்தப்பாவின் தங்கை மகள் என்றும், பெயர் பானு என்றும், 7 ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதாகவும் என் சித்தி கூறினாள்

அடுத்த இரண்டு நாட்கள் நான் தனியாக சுற்றிக்கொண்டிருந்தேன். பின் பானு சிறிது சிறிதாக என்னிடம் பழக ஆரம்பித்தாள். நான் அவளுக்கு  ஊர் முழுவதும் சுற்றிக்காட்டினேன். அந்த இரண்டு வாரத்தில் அவளின் அழகும் கொஞ்சம் கூடியிருந்தது.  நான் முடிவு செய்துவிட்டேன். நான் முத்தம்  கொடுக்க தகுதியானவள் இவள் மட்டும்தான். ஆனால் எப்படி கொடுப்பது? இதைப்பற்றி ராமுவிடம் வேறு கேட்காமல் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் முதல் அவள் தனியாக இருக்கும் சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதிக நேரம் காக்கவில்லை. அன்று அவள் தனியாக இருந்தாள். வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு சென்றுவிட்டிருந்தார்கள்.

“என்ன அப்டி பாக்குற!”
“ஒண்ணும் இல்ல! கொஞ்சம் கிட்டவாயேன்!”
“வந்துட்டேன். சொல்லு?”
“கண்ணமூடு!”
“சரி மூடிட்டேன்! சீக்கிரம் சொல்லு!”

அந்த நிமிஷம் ஒருவித பயமும், பரவசமும் என்னை சூழுந்துகொண்டது. நான் என் உதடுகளை ஈரப்படுத்திகொண்டேன். நான் அவள் முகத்தருகே சென்றபோது………….

“தம்பிரீ! நல்லா இருக்கீங்களா? ஊர்லேர்ந்து எப்ப வந்தீங்க? நீங்க வந்திருக்கறதா சொன்னாங்க. அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்!” ஒரு கிழவன் உள்ளே நுழைந்தான். பானு வெளியே ஓடிவிட்டாள். அடுத்த அரைமணி நேரம் அவர் பேசியது எதுவும் என் காதுகளில் விழவில்லை.  என் மனம் பானுவையே நினைத்துகொண்டிருந்தது.

“ச்சே! நல்ல நேரத்துல வந்து காரியத்த கெடுத்துட்டான்.…பாவி!.... என் எண்ணத்தில் அணுகுண்டு வைத்து தகர்த்த அந்த கிழவனை………….……..என்ன செய்ய முடியும்……………………..ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்த ஒரு வாரம் பானுவை தனியாக சந்திக்க முடியவில்லை.
டுத்த நாள் காலை
“பாபு! உங்க ஊர்ல திருவிழாவாம். அம்மா உன்ன நாளைக்கே ஊருக்கு வர சொன்னாங்க” சித்தி.

என் நேரம் வெகு விரைவாக முடிந்துவிட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.  பரவால்ல….………………
முத்தம் குடுக்க ஒரு நொடி போதும். இன்று எப்படியாவது அவளுக்கு முத்தம் கொடுத்துவிட வேண்டும்.  நான் அவளை தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அமர்ந்திருந்தாள். இரண்டாவது முயற்சியாதலால் சற்று தைரியம் அதிகமாகவே இருந்தது. நான் அவளருகே சென்று.................
ப்ப்ப்சச்!
“Wow! Mission Accomplished!”
“மாமீமீமீமீமீ!!!!!!!!!!!!!!!!!!!!!”

அவள் ‘ஒ’ வென கதற ஆரம்பித்தாள். நான் அவள் வாயை பொத்தி....
“ஏன்டி அழுவுற! அழுகாத! இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி அழற?”
“ஹ்ம்ம்ம்..நீ ஏன் எனக்கு முத்தம் குடுத்த. முத்தம் குடுத்தா கொழந்த பொறக்கும்னு உனக்கு தெரியாதா?....................”
“அய்யயோ! இது எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க…ஹீன்ன்ன்னக்க்….” அவள் அழுதுகொண்டே ஏதேதோ உளறினாள்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி…நீ யார் கிட்டயும் சொல்லாத…ப்ளீஸ்” அவளை தேற்றி அனுப்புவதற்குள் ஒரு வழியாகிவிட்டது. ஆனால், அவள் சென்றதும் பயம் என்னை தொற்றிக்கொண்டது.

“ஒருவேளை உண்மையாவே கொழந்த பொறந்துருமா? நான் சரியா கூட முத்தம் குடுக்கலையே!…..
அப்டி ஒருவேள பொறந்துட்டா............
“என் வயித்துல வளர்ற கொழந்தைக்கு……………” பல தமிழ்படங்களின் வசனங்கள் மனதிற்குள் எதிரொலித்தது. 

நான் தமிழ்ப்பட முதலிரவுக்காட்சிகளை நினைவு கூர்ந்தேன்.
கதாநாயகன்  கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கிறான்……………... விளக்கு அணைக்கப்படுகிறது…… பத்து மாதம் கழித்து………………க்வா…..க்வா!!!!!

“ஐயோ! அப்போ படத்துல வந்தா மாதிரி கொழந்த பொறந்துருமா! நான் அங்கேயே அழ ஆரம்பித்தேன்
“ச்சே! என் சந்தேகத்தை தீர்த்துவைக்க, ராமு வேற பக்கத்துல இல்ல! இப்ப நான் என்ன பண்றது?”.

அன்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. தமிழ்ப்பட வசனமும், பானுவின் பிம்பமும்  மாறி மாறி என் நினைவில் வந்துபோனது.

மறுநாள் காலை, நான் ஊருக்கு திரும்ப ஆயத்தமானேன்.
“சித்தி! நான் ஒன்னு கேட்டா  சொல்லுவியா?”
“சொல்லுடா! என்ன வேணும்?”
“இல்ல!……….. கொழந்த எப்டி பொறக்குதுன்னு கொஞ்சம் சொல்றியா?”

“ஊருக்கு போறப்ப திட்டகூடாதுன்னு பாக்கறேன். முளைச்சி மூணு இல விடல. அதுக்குள்ள பேச்சப்பாரு! வாய மூடிட்டு ஊருக்கு போ. இல்ல, உங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்!”

நான் பெரியவர்களிடத்தில் எதைக்கேட்டாலும் இதையே சொல்கிறார்கள். அந்த மூணு இல எதுப்பா?

நான், ராமு மற்றும் முத்து

“ஏன்டா பேயறஞ்ச மாதிரி இருக்கே?” ராமு. நான் நடந்ததை கூறினேன்.
ராமு சிரிக்க ஆரம்பித்தான்.

“முத்தம் குடுத்தா எங்கயாவது கொழந்த பொறக்குமா?” இதைப்பற்றி சரியாக தெரியாவிட்டாலும், முத்துவும் சேர்ந்து சிரித்துகொண்டிருந்தான்.

“அப்புறம் எப்டிடா பொறக்கும்?”
“பொண்ணு வயசுக்கு வந்தாதான் கொழந்த பொறக்கும்” ராமு.
“அப்டின்னா?” எனக்கு பதிலளிக்காமல் இருவரும் சிரித்தனர்.
“பானு வயசுக்கு வந்துட்டாளா?”
It’s a hypothetical question.
“அம்மா! பானு வயசுக்கு வந்துட்டாளா?”
“அத ஏன்டா இப்ப கேக்குற?”
“சும்மாதான்”
“தெரிஞ்சு என்ன பண்ணபோற? போ!போய் படிக்கிற வேலையப்பாரு”…….

அதன்பிறகு பானுவிடமிருந்தோ, சித்தியிடமிருந்தோ எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் மூவரும் பிரிந்து அவரவர் பாதையில் பயணித்தோம். நான் கல்லூரி சென்றதும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்,
ஸ்டெல்லா ராமுவுடன் சேர்ந்து ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், முத்து அனிதாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அம்மா கூறினாள்.
எனக்கு சிறு வயதில் நடந்ததை நினைத்து சிரிப்பாக இருந்தாலும்...........

“*த்தா! 27 வயசாச்சி…..இன்னும் ஒரு பிகர கூட மடக்க முடியல!”

Tuesday, April 12, 2011

க்வெண்டின் டரண்டினோவும் தமிழ் சினிமாவும்

க்வெண்டின் டரண்டினோவும் (இன்றைய)தமிழ் சினிமாவும்



க்வெண்டின் டரண்டினோவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இவரின் படங்களை போல் தமிழ் சினிமாவில் எந்த படமும் வெளி வந்ததில்லை எனலாம். முதலில் இவரின் படங்களை பற்றி ஒரு அலசல்.



Pulp Fiction (1994)



இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூவரில் யாருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது, ஒரு புள்ளியில் மூன்று கதையும் ஒன்றாக சேர்கிறது. படம் ஒரே நேராக செல்லாமல் ‘non linear story’ வகையில் செல்கிறது. படம் முடிந்தவுடன் எது ‘climax’ என்று அறிய உங்களுக்கு குறைந்தது 2-5 நிமிடம் வரை தேவைப்படும். இல்லையெனில் ‘climax’ ஐய அறிய நீங்கள் படத்தை ஒரு முறை fast forward செய்வீர்கள். அப்படியும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் படம் உங்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம்.



Reservoir Dogs (1992)



இந்த படத்தை பார்த்தபோது, தமிழ் சினிமாவில் இப்படியொரு படம் எடுக்கமாட்டார்களா என ஏங்கினேன். இந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒரு பெண் கூட இல்லை. இந்த படத்தில் மொத்தம் 8 நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த 8 பேரும் அவர்கள் கொள்ளையடிக்கப்போவதை பற்றி plan செய்கிறார்கள். அவர்கள் கொள்ளைடிக்கப்போனபோது என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் கொள்ளையடிக்கபோகும் காட்சி திரையில் காட்டப்படுவதில்லை. இந்த 8 நாய்களில் ஒரு நாய் போலீஸ் நாய் என்பது ‘climax’ இல் தெரியவருகிறது. இந்த படத்தின் ‘climax’ காட்சி போல் இதுவரை எந்தப்படத்திலும் வந்ததில்லை எனலாம். நீங்கள் ‘climax’ ஐ பார்க்க வேண்டும் என்று விரும்பினால் கிழ்க்கண்ட link ல் காணலாம்.



http://www.youtube.com/watch?v=ePqgOzEKG3o



இதே போன்றே இவரின் மற்றபடங்கலான ‘Inglorious bastards, Kill bill, Death proof…..இன்னும் பல’ படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை நீங்கள் காணலாம். இதில் ‘death proof’ மட்டும் சரியாக ஓடவில்லை என்றாலும் இதில் வரும் ‘chasing scene’ உலகத்தரங்களில் ஒன்றாக உள்ளது. Link இதோ,



http://www.youtube.com/watch?v=h0LhNwDcjYQ



இவர் படங்களின் சிறப்பம்சங்கள்.



1. ஹீரோ அல்லது ஹீரோயின் யாராவது ஒருவர் மட்டுமே இருப்பது. (முடிந்த வரையில் அதுவும் தவிர்க்கப்படுகிறது)
2. காதல் காட்சிகள் அறவே இல்லை(pulp fiction ல் மட்டும் ஒரு சில காட்சிகள் உண்டு)
3. கதை ஒரே நேராக இல்லாமல் இருப்பது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாமல் இருப்பது.
4. எதிர்பார்த்திராத climax காட்சிகள்.
5. Low budget படங்கள்.



இவர் படங்களின் கோளாறுகள்.



1. எல்லா படங்களும் வன்முறையை சார்ந்திருப்பது.



இதைபோன்ற படங்களை பார்க்கும்போது தமிழில் ஏன் இதைபோன்ற படங்கள் வருவதில்லை என யோசிக்கத்தோன்றுகிறது.
இதைப்பற்றி என் நண்பனிடம் வாதம் செய்தபோது, தமிழில் இதைபோன்ற படங்களை எடுக்கும் அளவுக்கு இங்கே யாருக்கும் திறமை இல்லை என்றான். இதை நான் மறுக்கிறேன், காரணம்



தமிழ் திரையுலகில் கதையை விட ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இரண்டு (அ) மூன்று பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பதில்லை.


Hero introduction - fight followed by opening song, படத்தில் 5 பாடல்கள், 5 சண்டைக்காட்சிகள், 2 டூயட் பாடல்கள்(abroad location) நடுவில் ஒரு குத்துபாட்டு போன்ற பல வரையறுக்கப்படாத விதிமுறைகள் தமிழ் சினிமாவில் உள்ளது. ஹீரோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை(gud, bad, anti hero). ஹீரோயின் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக(அழகாக) இருக்கவேண்டும் என்பது விதி. இதற்கு மாறாக ஒரு சில படங்களே வந்துள்ளது. EX . புதுப்பேட்டை



ஆனால் இதைபோன்ற படங்களிலும் ‘சோனியா அகர்வால்’ போன்ற கேரக்டர்கள் திணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் இந்த விதிமுறைகளை மீறி படம் எடுக்க முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் இங்கே இயக்குனர்களின் போக்கிற்கு யாரும் படம் எடுக்க விடுவதில்லை. ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்களின் முறையீடுகள் அதிகமாக உள்ளது. அவர்கள் சினிமாவை ஒரு ஊடகமாக பார்க்காமல் வியாபார ரீதியாகவே பார்க்கிறார்கள். அப்படியே இருந்தாலும் இயக்குனர்கள் தங்களை நிரூபிக்க ஒன்று அல்லது இரண்டு கமர்சியல் படங்களை இயக்கவேண்டியுள்ளது. அதற்கு சில எடுத்துக்காட்டுகள் இதோ,



உண்மையில் ‘இதயக்கோவில்' ன் கதையும் கிளைமாக்ஸ் காட்சியும் வேறாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த புதிது என்பதால் தயாரிப்பாளரின் பேச்சை தட்டமுடியாமல் அவரின் கருத்திற்கேற்ப ‘climax’ஐ மாற்றிவைத்தேன் – மணிரத்னம்.



நான் சினிமாவிற்கு வந்ததே ‘பருத்தி வீரன்' படத்தை எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். புதிய இடம் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவும் ஹீரோயினும் பெரிய ஆட்கள் இல்லை போன்ற காரணங்களினால் மௌனம் பேசியதே படத்தை எடுக்க நேரிட்டது – அமீர்.



அடுத்து தமிழ்படங்களின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்



தற்போது தமிழில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குறைந்தது 5 பாடல்களை கொண்டுள்ளது. அதில் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு. உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகள் எதற்காக? தேவையான இடங்களில் பாடல்கள் இருக்கலாம். ஆனால் குறைந்தது 5 பாடல்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 


பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைத்துவிடுவது மட்டுமல்லாமல் குத்துப்பாடல்களால் தமிழ்ப்படம் * மதிப்பை இழந்து விடுகிறது. திரு. மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘நாயகன்’ படம் உலகின் மிகச்சிறந்த 100 படங்களின் பட்டியலில் 63 வது இடத்தை வகிக்கிறது.



http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146_1953789,00.html



ஆனால் அவர் படத்திலும் மசாலா (நிலா அது வானத்து மேலே, ருக்குமணி ருக்குமணி ......) பாடல்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
சமீபகாலத்தில் வெளிவந்த ‘நான் மகான் அல்ல, அலி பாபா’ போன்ற படங்களில் பாடல்கள் குறைக்கபட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம். பாடல் காட்சிகளால் பலர் பயனடைவார்கள் என்ற ஒரே ஒரு நல்ல விஷயத்தை தவிர தமிழ் படங்களில் வரும் பாடல்களால் எந்த உபயோகமும் இல்லை.



அடுத்து வருவது சண்டைக்காட்சி.



தமிழ் பட ஹீரோ எவ்வளவு உடல் வளம் குறைவாக இருந்தாலும் குறைந்தது 20 வது முதல் 25 ஆட்களை அசால்ட் ஆக அடிக்கிறார். ஒரு சில படங்களில் சண்டைக்காட்சிகள் பாதியாகவும், கதை மீதியாகவும் இருப்பதை கூட நீங்கள் காணலாம். வெகுநேர சண்டைக்காட்சிகள் நம்மில் பலரை கடுப்படையசெய்கின்றன. அந்த வகையில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும், ‘ஈசன்’ படத்தில் வரும் சண்டைக்காட்சியும் சற்று வித்தியாசமாகவும், நம்பும்படியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



கடைசியில்



“ஹீரோயின், பாடல்கள் & சண்டைக்காட்சிகள் இல்லாம தமிழ்படம் வந்தா ஒடுமாடா?” என நண்பனிடம் கேட்டதற்கு,
“தியேட்டரை விட்டு வேணும்னா ஓடும்” என்றான்.



இது போன்ற தேவையற்ற விதிமுறைகளை தமிழ் படங்களிலிருந்து நீக்காவிட்டால், தமிழ் சினிமா உலக அளவில் என்ன? தேசிய அளவில் கூட பேசப்படாது என்பது என் கருத்து/ஆதங்கம்.



வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சினிமா!.
Powered by Blogger.

Followers

About Me