பாசத்தையும் சரி! வெறுப்பையும் சரி! பொண்ணுங்க அளவுக்கு பசங்களால காட்ட முடியாது
நாசமாய் போன கலிகாலத்தின் ஒரு காலை வேளையில், ஒரு பெண் என்னை போனில் தொந்தரவு செய்தாள். எனக்கு ஒரு நாளைக்கு வர்றது 5 கால். அதுல நாலு கால் கடன்காரனா இருக்கும். கடன் கேட்டாலே என்ன ‘international terrorist’ மாதிரி பாக்குறாங்க. மீதி ஒரு கால் இது மாதிரி,
அவ 15 முறை போன் பண்ணதுல எனக்கு புரிஞ்சது ஒன்னே ஒன்னுதான்.
கிரெடிட் கார்டுவாங்கலையோ! கிரெடிட் கார்டு!
திருவிளையாடல் சிவாஜி போல கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தாள். கோல்ட் கார்டு வாங்கினா இந்த பெர்ப்யும் ஸ்மெல் வரும், பிளாட்டினம் கார்டு வாங்கினா இந்த பெர்ப்யும் ஸ்மெல் வரும்னு அவ சொன்னப்ப எனக்கு மயக்கம்தான் வந்துச்சி. அரை மயக்கத்திலே அவ என் ஆபீஸ் அட்ரஸ் வாங்கிகிட்டா. 12 மணிக்கு ஆபீஸ் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட். எண்ட பிரன்ட் ஒரு வல்லிய குட்டி மீது மோதி….. த்து…. என் ப்ரண்ட் ஒரு பொண்ணு மேல தெரியாம மோதிட்டானாம். அவன் நடந்த விபத்தை விவரிக்கும்போது என் செல்போன் ஒலித்தது
“எந்த கடன்காரனோ!!!!” என்று சொல்லிக்கொண்டே கால் ஆன் செய்ய, கேட்டது ஒரு பெண்ணின் குரல்
“ஹலோ. திஸ் இஸ் அனு. ஐ அம் இன்ப்…….” அந்த பெண்
“ஹலோ! நான் பொண்ணுங்க கிட்ட எல்லாம் கடன் வாங்கல. வ்ராங் நம்பர் ” என்று சொல்லிவிட்டு போன் ஐ அனைத்தேன். அவள் மறுபடியும் போன் செய்தாள்
“ஹலோ! ஐ அம் அனு ப்ரம் abcd பேங்க். டோன்ட் யு ரிமம்பர் மீ. ஐ கால்டு யு இன் தி மோர்னிங். ஐ அம் இன்ப்ரன்ட் ஆப் யுவர் ஆபீஸ். கம் குய்க்லி” பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அவளை நான் கிழே சென்று அழைத்து வர என் நண்பன் அவளை வெறித்தான்.
“ஸ்டுபிட்! ……. த்து!........ என் நண்பனை பார்த்து துப்பிவிட்டு என்னிடம் கேட்டாள்”
“வூ இஸ் ஹி?”
“ஹி இஸ் மை கலீக்” என்று அவனை அறிமுகம் செய்ய மறுபடியும் துப்பினாள்
“க்கும்.. ”
நான் என் நண்பனிடம் சைகையில் கேட்க அவன் மோதிய பெண் இவள்தான் என்று கூறினான். நானும் அவளை அப்போதுதான் கவனித்தேன். அவளிடம் மலையாள வாசனை வீசியது.
“ஆக்சுவலி, க்நயன்…....... ஐயோ எனக்கு மலையாளம் தெரியாது” நான்
“இட்ஸ் ஓகே! ஐ நோ தமிழ். இந்த பாரம்ல ஒரு சைன் பண்ணுங்க. அப்புறம் இந்த லிஸ்ட்ல இருக்கிற டாகுமென்ட்ஸ் எல்லாம் குடுங்க” என்றாள். நான் அவள் கேட்டதை தயார்படுத்திக்கொண்டே அவளிடம் கேட்டேன்
“உங்க பேரு என்ன சொன்னீங்க. ஓமனகுட்டியா?”
“ஹே நோ. மை நேம் இஸ் அனு.
“அனு ன்னா?”இது என் ப்ரண்ட்
“அனு நாயர்”என்றாள்
“நாய் னா வரிக்கி மட்டும்தான் சாப்பிடுவீங்களா?” என் நண்பன் கேட்டுவிட்டு அவனே கொல்லென்றுசிரித்தான். நாங்கள் எல்லோரும் அவனை பார்த்து விழிக்க
“முட்டா பயக! சோக்கு புரியல…. தொப்பி! தொப்பி!…” என்று மறுபடியும் சிரித்தான்
“இப்ப அவன் சிரிக்கரத நிறுத்தல, நான் உங்களுக்கு ஒரு வல்லிய பஞ்ச் தரும்” அனு.
நான் அவனை கெஞ்சி கேட்டுக்கொள்ள அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அவள் டாகுமென்ட்ஸ்களையும்,பார்மையும் சரிபார்க்க, நான் அவள் அழகை ரசித்தேன்
“நீங்க எவ்ளோ டீசன்ட் ஆ பிஹேவ் பண்றீங்க. யு சி. ஹி ஸ் எ ப்ளிர்ட். கீழ நிக்கும்போது வேனுமென்னே மேல வந்து மோதிட்டான்” அனு. எனக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது. இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எல்லா வேலைகளும் முடிய மணி 2.30ஆகிவிட்டிருந்தது. போகும்போது ஒன்று கேட்டாள்.
“சாப்டாச்சா?”அனு
“இல்ல.நீங்க?”
“நானும் சாப்பிடல. நீங்களும் வாங்களேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” அனு
“வரலாம். ஆனா நீங்கதான் பில் பே பண்ணனும் ஓகே வா?” நான்
அவள் சிரிக்க அடுத்த 10 வது நிமிடம் நாங்கள் ஆளுக்கொரு பர்கர்ஐ ஆர்டர் செய்துவிட்டுகாத்துக்கொண்டிருந்தோம்.
“உங்களுக்கு கேர்ள் பிரன்ட் இருக்கா?” அனு
“உனக்கெல்லாம் எவளும் சிக்க மாட்டாடா! உங்க அப்பா அம்மா பாத்து கட்டி வெச்சாதான் உண்டு. இனிமே என் முகத்துல முழிக்காத”
“ஹலோ! உங்களைதான் கேட்டேன். உங்களுக்கு கேர்ள் பிரன்ட் இருக்கா” அனு
“இல்ல” நான்
“இப்படி பர்ஸ மூடி மூடி வெச்சா எப்படி வரும்" அனு. அவள் இதை சொல்லி முடிக்க நாங்கள் ஆர்டர் செய்த பர்கர் வந்தது. சப்ளை செய்தவனும் என்னை முறைத்துவிட்டு சென்றான்.
“க்கும்! பர்ஸ தெறந்து வச்சா மட்டும் வருமாக்கும்” நான் சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தேன்
அவள் சிரித்துவிட்டு அவள் பின்னணியை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். இடையிடையே என்னைப்பற்றியும் கேட்டுத்தெரிந்துகொண்டாள். எல்லாம் முடித்து கிளம்பும் வேளையில் நான் அதைக்கூறினேன்
“I had a love story”
“ஒ இஸ் இட்! யாரு. என்ன ஆச்சு. இப்ப எங்க இருக்காங்க?” அவள் அடுத்து ஒரு காபியை ஆர்டர் செய்ய நான் என் கதையை கூற ஆரம்பித்தேன்
அது நான் 12 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். அப்படி ஒருவள் இருந்தாள். வெள்ளையும் இல்லாமல், சிகப்பும் இல்லாமல், கருப்பும் இல்லாமல், மூன்றும் கலந்த ஒரு கண்றாவியான….. ச்சே!..... ரொமாண்டிக்கான கலரில். எனக்கு ஒரு வயது மூத்தவள். நான் படிக்கும் பள்ளியில்தான் அவளும் படித்தாள். நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்று என்னைவிட நன்றாக தெரிந்துவைத்திருந்தாள். அவள் வீட்டில் இருந்ததை விட எங்கள் வீட்டில்தான் அதிகம் இருந்தாள். அவள் பெயர் ரேணுகா. நான் அவளை அக்கா என்று அழைத்தபோது பெயர் சொல்லி அழைக்குமாறு உத்தரவிட்டாள்.
நான் பொதுத்தேர்விற்கு அவளிடம் சொல்லாமல் போனதற்கு என்னை பூரிக்கட்டையாலையே அடித்தாள். பிறகுதான் தெரிந்தது அவள் எனக்காக விரதம் இருந்தது. அவளின் தயவால் நான் தேர்வில் வெற்றிபெற்று கல்லூரியில் சேர்ந்தேன். அவளும் வேறொரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். பிறகு அவளை அதிகம் சந்திக்கமுடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழைய நாட்களைபோல் நாங்கள் இருவரும் மாடியில் அமர்ந்திருக்க
“அரவிந்த்! உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” ரேணுகா
“சரி! அதான் வந்துட்டேன்ல” நான்
கல்யாணம் வரைக்கும் பொண்ணுங்களுக்கு தெரிஞ்சுது மூனே மூணு கெட்ட வார்த்த. நாயே, பேயே, அப்புறம் ஐ லவ் யு . பொதுவா பசங்க ஒரு பொண்ண லவ் பண்ணா ‘ஐ லவ் யு’ னு சொல்லுவாங்க. ஆனா பொண்ணுங்க நேரடியா சொல்லமாட்டாங்க. சுத்திவளச்சிதான் சொல்லுவாங்க. அப்டி அவங்க சொன்னாலும் பசங்களோட மரமண்டைக்கு அது புரியாது. எனக்கும் அதமாதிரிதான் ஆச்சு!
“நான் அத சொல்லல அரவிந்த்! நீ கடைசி வரைக்கும் என் கூடவே இருக்கனும். என்ன விட்டு எங்கயும் போககூடாது. இன்னும் சொல்லனும்னா உன் கொழந்த என் வயித்துலதான் வளரனும்(இதுக்கு ‘ஐ லவ் யு’ எவ்வளவோ பரவால்ல)” ரேணுகா
நானும் புரியாத மாதிரி நடிச்சி
“எல்லாம் ஓகே! ஆனா இதுக்கு உன் புருஷனும், என் பொண்டாட்டியும் ஒத்துப்பாங்களா?” இப்ப இது ஒரு மொக்க ஜோக். ஆனா அவள் இதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு என்னை திட்டினாள்
“உனக்கெல்லாம் எவளும் சிக்கமாட்டாடா. உங்க அப்பா அம்மா பாத்து கட்டி வச்சாதான் உண்டு. என் காதல கொச்சபடுத்திட்டயில்ல. இனிமே என் முகத்துலேயே முழிக்காத!” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். நாம் விளையாட்டாக உபயோகிக்கும் வார்த்தை ஒரு சிலருடனான உறவை முற்றிலுமாக உடைத்துவிடுகிறது. நானும் பலமுறை முயற்சிசெய்தும் அவளை சந்திக்க முடியவில்லை. அடுத்தமுறை அவளை சந்தித்தபோது அவளுக்கு திருமணமாகிவிட்டிருந்தது. அவள் காதலை மட்டும் சுமந்துகொண்டு நாட்களை கடத்தினேன்.
“அவ புருஷன் ஆக்சிடென்ட்ல செத்து, எனக்கும் ரேணுகாவுக்கும் கல்யாணம் ஆச்சின்னா திருப்பதியில் வந்து மொட்டையடிக்கிறேன்” என்று வேண்டிக்கொண்டேன். ஆனால் இன்றுவரை நடக்கவில்லை. வெங்கிக்கு என் முடி தேவையில்லை போல.
நான் கதையை முடிக்கவும், அனு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“அனு! சிரிக்காதீங்க. நான் ரொம்ப பீல் பண்றேன்”
“நீங்க அவ்ளோ இன்னொசென்ட்ஆ” என்று மறுபடியும் சிரித்தாள். நான் காபியை குடித்துவிட்டு பர்சை தேடுகையில் அவள் கூறினாள்
“அரவிந்த்! I too had a love story” அனு. நான் பர்சை விட்டுவிட்டு இன்னொரு காபியை ஆர்டர் செய்தேன்
பிறகென்ன! சில காபிகள், டெய்லி SMS, இரவுநேர போன்கால்கள், சில சிணுங்கல்கள், சில கொஞ்சல்கள், சில சண்டைகள், பல மன்னிப்புகள் எல்லாம் முடிந்து அனு இப்ப 3 மாசம். அட! எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிட்டுங்க.
பி.கு
அந்த பர்கருக்கும், காபிக்கும் நாந்தான் பில் பே பண்ணேன். அந்த பேங்க்ல இன்ட்ரஸ்ட் அதிகம்னு சொல்லிட்டு அவ கிரெடிட் கார்டு கடைசி வரைக்கும் வாங்கித்தரல!!!!!