I M GONNA GET ORGANIZ - IZED

Friday, November 18, 2011

ஹலோ! நீங்கதான் இந்த காலேஜோட மக்கு ஸ்டுடண்டா?

 “ஹலோ! நீங்கதான் இந்த காலேஜோட மக்கு  ஸ்டுடண்டா?”

இந்த கேள்வியை கேட்டதும் என்னோட சேர்த்து அந்த ஏரியால இருந்த எல்லாரும் திரும்பி பாத்தாங்க. ராகேஷ் மட்டும் என்னை பாத்து  நீ இல்லடான்னு சொல்லி கூட்டிட்டு போனான். அதாவது நான் காலேஜோட ஆவரேஜ் ஸ்டுடண்டா இருந்தேன். அப்பப்போ மக்கு ஸ்டுடன்ட்  கேட்டகரிக்கு போய் அட்டன்டன்ஸ் போட்டுட்டு வந்தேன்.

உண்மை என்னன்னா மக்கு ஸ்டுடண்டா கூட இருந்துடலாம். இந்த ஆவரேஜ் ஸ்டுடண்டா இருக்கறது பெரிய கஷ்டம். எப்ப எந்த பேப்பர் கவுக்கும்ன்னு தெரியாம, தலைபிரசவத்துக்கு காத்திருக்கிற பொண்ணு மாதிரிதான் பசங்கெல்லாம் ரிசல்ட பாக்க காத்துகிட்டு இருப்பாங்க. நடக்கறது நடக்கட்டும்ன்னு இருக்கிற கொஞ்ச பேர்ல நானும் ஒருத்தன். என்னதான் என்னபத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணாலும், அந்த மக்கு ஸ்டுடன்ட் லிஸ்ட்ல இல்லாம இருக்கற  என் பேருக்காக நானும் அப்பப்போ வெளிய  இருந்து ஆதரவு தந்துக்கிட்டுதான் இருந்தேன்.

நீங்க பொதுவா ஒரு அரியர் வாங்கினாலும் உங்கள மக்கு லிஸ்ட்ல சேத்துருவாங்க. நோட்ஸ் கிடைக்காது. எக்ஸாம் ஹால்ல சீட் கூட கெடைக்காது. எனக்கும் அப்படிதான் ஆச்சி. எல்லாரும் லைப்ரரி புக்க கிழிச்சி எடுத்துட்டு போய் காபி அடிக்க, நானும் புக்க கிழிச்சா ஜூனியர்ஸ் படிக்க புக் இருக்காதுன்னு பொதுநலத்தோட புக்கையே உள்ள எடுத்துட்டு போய் காபி அடிச்சி பாஸ் பண்ணேன்.

அடுத்து வேல. வேல கிடைச்ச  ரெண்டாவது நாளே  என்ன நார்த் இந்தியாக்கு அனுப்புனாங்க.  கேட்டதுக்கு தமிழ்நாட்டுல வேல செய்றவன் சாதாரண  பூபதி! நார்த் இந்தியாக்கு போறவன்தான் ஆல்தோட்ட பூபதினு வசனமெல்லாம் பேசி ஒரு முக்கியமான கேள்வி கேட்டாங்க

 “உனக்கு ஹிந்தி தெரியுமா?” 

எனக்கு ஹிந்தில தெரிஞ்ச ஒரே வார்த்தை “ஏக் மார் தோ துக்கடா”. இத கேட்ட எல்லாரும்  சிரிச்சி

"நீ தனியா போகல. கூட இன்னொரு ட்ரைனி  வருவாரு. பேரு ஜவஹர்"

இவன பத்தி நாம அப்புறமா பேசுவோம்.

நான் போகவேண்டிய ஊருக்கு நேரா ட்ரெயின் இல்ல. ரெண்டு ட்ரெயின் மாறிதான் போகணும். நார்த் இந்தியாக்கு போகும்போது  சும்மா போகக்கூடாதுன்னு மூணு பெட்டிய வேற குடுத்துட்டு போய்ட்டாங்க. ஹவ்ரா எக்ஸ்பிரஸ்! மூணு வசூல் எக்ஸ்பிரஸ்(உயர்திரு ரயில்வே காவல்  துறை அதிகாரிகள்) என்ன சுத்தி நின்னுகிட்டு

“பெட்டிக்கு பில் இல்ல. இங்கயே கவனிக்கிறியா? இல்ல கூடூர்ல இறங்கிக்கிறியா?”

என் பக்கத்துல அதுவரைக்கும் இருந்த ஜவஹர் திடீர்னு காணாமபோய்ட்டான். நானும் நல்ல யோசிச்சி கூடுர்ல இறங்கிக்கறோம்னு சொல்லிட்டு தூங்கி எழுந்தா விஜயவாடவே வந்திடிச்சி. அடுத்த ட்ரெயின் 10.30am க்கு. 10.25am  வரைக்கும் ட்ரெயின் எந்த ஃபிளாட்பார்ம்க்கு வருதுன்னே தெரியல. நாலு ஃபிளாட்பாரம் தள்ளி இருக்கற ட்ரெயின்க்கு என் கூட வந்த ஜவஹர்தான் எல்லா பெட்டியையும் தூக்கிட்டு வந்தான்.

“என்ன பாக்கற? நான் கொக்கோ பிளேயர். நல்லா ஓடுவேன்” ஜவஹர்

“அதான் நேத்து நைட்டே பாத்தனே” – நான். 

நம்மாளு மொரச்சிட்டு உள்ள போனான். நைட்  12 மணி அடிக்க 5 நிமிஷம் முன்னாடி 'மை டியர் லிசா'ல வர பேய் பங்களா கொல்லப்பக்கம் மாதிரி  இருக்கிற ஒரு எடத்துல இறக்கிவிட்டுட்டு அதுதான் நாங்க இறங்கவேண்டிய ஊருன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. ஒரு வழிய  ரூம்க்கு போனா ஒரே பசி…

“நைட் 12 மணிக்கு என்ன இருக்கும்?” நான்

“தெரு முனைல கடை இருக்கும். ‘சாவல்’ ன்னு  கேட்டா சாப்பாடு  குடுப்பாங்க”  அறை நண்பன்

அவன்  சொன்னதா வச்சி நானும் போன இடத்துல ஒரு பொட்டிக்கடை இருந்திச்சி. ஜவஹர் என்கூட வரல.
உள்ளபோய் ‘சாவல்’ன்னு கேட்டதும் ஒரு தட்டுல சோத்த கொண்டுவந்து வச்சிட்டு போய்ட்டான். கொழம்பு இல்ல. கொழம்புக்கு என்ன சொல்லி கேக்கறதுன்னும் தெரியல. அவன கூப்பிட்டு டீ ஆத்துற ஸ்டைல்ல நானும் என்னென்னவோ செஞ்சு காட்டினதுக்கு அப்புறம் அந்த வார்த்தய சொன்னான்.

“ச்சாம்பார்”

“ராசா! தெய்வம்டா நீயி!” அப்படின்னு மண்டைய ஆட்னதும் கொண்டு வந்து ஊத்துனான் பாருங்க! நம்ம ஊர்ல உரி அடிக்கும்போது ஊத்துற மஞ்சத்தண்ணி மாதிரியே இருந்திச்சி. நம்ம ஊரு பொண்ணுங்களா இருந்தா அதுல இருந்து தண்ணி, மஞ்சள் ரெண்டையும் பிரிச்சி இருப்பாங்க. இதுக்கு பேருதான் வெளியூர்ல (கஷ்டப்பட்டு) வேல செய்றதோன்னு நெனச்சிட்டு போய்  மறுநாள் வேலைக்கும் சேர்ந்தாச்சி. மறு நாள்  மதியமும் அதே மாதிரி ஒரு பிரச்சனை.

மாட்டு கொட்டா மாதிரி இருந்த அந்த கடைல போய் நானும் ஜவஹரும் நின்னோம். எல்லாரும் அவங்கவங்க ரேஞ்ச்க்கு சப்பாத்திய(ஊறுகாயோட) உள்ள எறக்கிட்டு இருந்தாங்க. நேத்து மாதிரி எதுவும் ஆகக்கூடாதுன்னு நானும் கேர்ஃபுல்லா ‘ரெண்டு’ சப்பத்திய மட்டும் தின்னுட்டு பில் கவுன்ட்டர்ல போய்

“டூ சப்பாத்தி. கித்னா?” நான்

கவுன்டர்ல   இருந்தவன் கூட்டத்துல இருந்த ஒருத்தன  கூப்ட்டு என்னவோ கேட்டுட்டு

“தோ கானா! பசாஸ் ருபையா(ஃபிப்டி ருபீஸ்)!”  - கடைக்காரன்

எனக்கு சாப்பிட்ட ரெண்டு சப்பாத்தியும் வெளியே வந்துரும் போல இருந்திச்சி.

“அட பச்சல புடுங்கி! நான் ரெண்டு சப்பாத்தி மட்டும்தாண்டா சாப்ட்டேன். அது 50 ரூபாயா?  என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு. 

"தோ சப்பாத்தி கித்னா?” - நான்

“தோ கானா! பசாஸ் ருபையா?” - கடைக்காரன்

பின்னர் அங்க இருந்த ஒரு ஆளு, நீங்க சாப்டது ரெண்டு(ஜவஹரையும் சேர்த்து) சாப்பாடு. ஒரு சாப்பாடு 25rs. எவ்ளோ சப்பாத்தி வேணும்னாலும் சாப்டலாம்ன்னு வெளக்குனாறு. அதுக்கப்புறம் டைலியும் 10, 15 சப்பாத்தின்னு சாப்ட ஒரு  மாசம் கழிச்சி நீ மட்டும் உள்ள வரக்கூடாதுன்னு  ‘wanted board’ போட்டு என்ன வெளியே நிப்பாட்டிட்டாங்க

நான் நார்த் இந்தியால வேல கத்துக்கிட்டனோ இல்லையோ! ஹிந்தி, அதிகமா சாப்டறது எப்படி! ரெண்டையும் சேர்த்து கத்துக்கிட்டு இந்தியாவ ரெண்டா பிரிச்சி ஒரு பாதிய சுத்துனதுக்கு அப்புறம் என்ன துபாய்க்கு வேலைக்கு கூப்டாங்க. எங்க வீட்ல இருந்து நான்தான் மொத முறையா வெளிநாடு போறேன். நான் தனியா போகல. என்கூட அதே கம்பெனில சேர  அஷ்வின்னு ஒருத்தர். நானும் மாடர்னா இருக்கே பேரு. பையன்தான்னு நெனச்சிட்டு ஃப்ளைட்ல உக்கார்ந்தா வந்தது ஒரு 45 வயசு ஆளு.

“அஷ்வின்! இந்த பேர வச்சிதான் நான் ஏமார்ந்துட்டேன்”

ஃப்ளைட விட்டு  இறங்கினதும் எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்க. “என்னங்கடா! அம்மன் கோயில்ல கூழு ஊத்துற மாதிரி இந்த குத்து குத்துரீங்கன்னு திரும்பி பாத்த அஷ்வின காணோம். ஒருவேல வரும் ஜவஹர் மாதிரி கொக்கோ  ப்ளேயரா ! அதான் சொல்லாம ஓடிட்டாரன்னு தேடினா தலைவர் ஆண்களின் அழகு நிலையமான பாத்ரூம்க்கு போய் மூஞ்செல்லாம் கழுவி தலை சீவிட்டு(நாங்களும்  சீவுவோம்! சீப்பும் வச்சிருக்கோம்- வடிவேலு ஸ்டைல்) பொறுமையா வெளிய வரதுக்குள்ள நாலு ஃபிளைட் ஆளுங்க எங்களுக்கு முன்னாடி ஓடிட்டாங்க.

அங்க போனா சென்னைல நடக்கபோற இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்க போனவன்  மாதிரி ஒரு பெரிய ஃக்யுல நின்னுகிட்டு இருந்தோம். ஒரு அரபி எங்ககிட்ட வந்து.

“விசா இல்ல! அதோ அந்த ஃக்யுல போய் விசா வாங்கிட்டு வாங்க”ன்னு சொன்னான்.  விசா வாங்கிட்டு வரதுக்குள்ள இன்னொரு ஃபிளைட் கூட்டம்  ஃக்யுல சேர ஒன் ஹவர் நின்னு ஐ  டெஸ்ட் பண்ணா மெஷின் என் கண்ண சென்ஸ் பண்ணவே இல்ல. சீட்ல இருந்த அரபி பொண்ணு எழுந்திரிச்சி வந்து

“உன்ன விட உன் கண்ணு கருப்பா இருக்கு”ன்னு அரபில திட்டிட்டு போனதும் மொத முறையா எனக்கு என் கண் மேல கோவம் வந்திச்சி.

எல்லாம் முடிச்சிட்டு வெளிய போனா நாங்க ரொம்ப லேட்டா  வந்துட்டோம்ன்னு பிக்கப் பண்ண வந்த டிரைவர் 160kmphல வண்டி ஒட்டி மொத நாளே அல்லு இல்லாம ஆக்கிட்டான். மறுநாள் ஆபீஸ்க்கு போனா என்னைத்தவிர எல்லா ஆளுங்களும் மலையாளி. ஏற்கனவே நமக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு. இதுல இது வேறயான்னு  தனியா போய்  நின்னு ‘எண்ட அம்மே’ன்னு சொன்னா பக்கத்துல இருந்தவன்…

“நிங்கல் கேரளாவோ?” அப்டின்னு கேட்டான் .

“ஹ்ம்ம்! ஆப்ரிக்கா” ன்னு சொல்லிட்டு சீட்ல போய் உக்கார்ந்தா அடுத்தவன் கேட்டான்.

"நீ எந்த கோலேஜ் படிச்ச?"

நான் அந்த காலேஜ் பேர சொன்னேன்

"அந்த காலேஜா? வல்லிய காலேஜானு. பின்னே ஏன் இங்க வந்து வேல செய்து?

"இதுவும் பெரிய கம்பெனிதானே" நான்

"வல்லிய கம்பெனி. நிங்கல் கோலேஜ் பெரியதல்லே. நிங்கல் கோலேஜோட மக்கு ஸ்டுடண்டோ?"

நான் அந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல. அப்புறம் அவங்களே புரிஞ்சிக்கிட்டாங்க

ஒரு வருஷம் துபாய்ல வேல செஞ்சிட்டு மேல படிக்கறதுக்காக செர்டிபிகேட் வாங்கறதுக்காக காலேஜ் வாசல்ல மறுபடியும் போய் நின்னேன். இந்த கதைல வந்த எல்லாம் என் மனசுக்குள்ள fast forward ஆக கலைச்சது அந்த குரல்

“ஹலோ! நீங்கதான் இந்த காலேஜோட மக்கு ஸ்டுடண்டா?”
நான் திரும்பி பாத்ததும்

“உங்கள இல்ல சார்! அந்த தறுதலைய” அப்டின்னு அவன் கைய காட்டின இடத்துல என்ன மாதிரியே ஒருத்தன் நடந்து போய்கிட்டு இருந்தான்.

நான் நெஜமாவே மக்கு ஸ்டுடண்டா? இன்னொரு டிகிரி படிக்கும்போதுதான் அது தெரியும். 

Thursday, September 29, 2011

ஆயா சுட்ட வடை/வடை சுட்ட ஆயா?


கிறிஸ்துமஸ் வெகேஷன். சும்மாதான இருக்க போற! வா எங்க ஊருக்கு போகலாம்னு ஜீவா கூப்ட கிறிஸ்துமஸ் ரெடி……….நானும் ரெடி. நம்ம ஊர்ல நல்ல நாள்லயே பஸ்ல கூட்டமா இருக்கும். பண்டிகைன்னா கேக்கவா வேணும். அதனாலதான் நானும் ஜீவாவும் ட்ரைன்ல டிக்கெட்  புக் பண்ணோம்.

சீக்கிரம் வாடா?
  என்று  ஜீவாவை அழைத்துக்கொண்டு வேகவேகமாக வீட்டுக்கு வெளியவர, எங்களுக்காகவே காத்துகொண்டிருந்தது போல  மழை படபடவென பெய்ய ஆரம்பித்தது.
“இது வேறயா?. இன்னைக்கி நாம ஊருக்கு போனா மாதிரிதான்” ஜீவா
“விடு மச்சி! சீக்கிரம் போய்டலாம். தடுக்கி விழுந்தா வேலூர்” என்று சொன்னப்பவே நான்  ஒரு சின்ன காவாயில் தடுக்கிவிழ.
“என்னடா! வேலூர் வந்தாச்சா?” ஜீவா
“நக்கலா. தூக்கி விட்ரா?” நான்
ஒரு வழியா நாங்களும் மடிவாலா பஸ் ஸ்டாப்க்கு வந்து சேந்தா எந்த பஸ்சும் வந்தாமாதிரி தெரில. அப்படியே வந்தாலும் நிக்கிற மாதிரி தெரியல.
“என்னடா நைட் 10.30கு இவ்ளோ கூட்டம்.  இவங்க எல்லாருமே மஜெஸ்டிக்குதான் போறாங்களா?” ஜீவா
“தெரியலடா”
“ஹைபோதேடிகல் கொஸ்டின்  இல்ல மச்சி” ஜீவா
“மண்ணாங்கட்டி! 11.30கு ட்ரெயின்டா. பஸ்ல போனா ட்ரைன பிடிக்கறது  கஷ்டம். வா ஆட்டோல போலாம்” நான்
“அவன் பாதி தலையை மட்டும் ஆட்டிட்டு மூஞ்சிய திருப்பிகிட்டான்”. நானும் பக்கத்துல இருந்த ஆட்டோல கேட்டேன்
“அண்ணே! மெஜெஸ்டிக் போனும். எவ்ளோ?”
250 rs
“70 rs?” நான்
“பஸ்ஸல்லி 50 rs”. அதுக்கு மேல என்னால பேச முடியல. கடைசில வேற வழியில்லாம நானும் ஜீவாவும் ஆட்டோல போனோம்.  ஸ்டார்டிங்ல ப்ரெட் லீ பௌலிங் மாதிரி செம ஸ்பீட்ல  போன ஆட்டோ மெஜஸ்டிக் கிட்ட வரவர  R P சிங்க் பௌலிங் மாதிரி  கொஞ்சம் கொஞ்சமா ஸ்லொவ் ஆயி சென்டிமீட்டர் சென்டிமீடரா மூவ் ஆகா ஆரம்பிச்சிடிச்சி. நடந்து போனவங்க எல்லாம் எங்கள மொரச்சிட்டு ஓவர்டேக் பண்ணி போனாங்க. நானும் கோவம் வந்து "ஒரு சுறாவளி கிளம்பியதே" ஸ்டைல்ல ஜீவாவ கூட்டிகிட்டு நடந்து கொஞ்ச தூரம்தான் போனோம். அதுக்குள்ள நடக்கரவங்களுக்குள்ள ட்ராபிக். ஒரு வழியா  ஃபியர்  ஃபாக்டர்ல வரவங்க மாதிரி அட்வென்ச்சர் எல்லாம்  பண்ணி ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்சேந்தோம்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நாங்க போய் சேந்தப்ப மணி 11.20. காவேரி எக்ஸ்பிரஸ் 6 வது பிளாட்பாரம்னு இருந்திச்சி.
நாங்க பெங்களூருக்கு புதுசு. அதனால 5 க்கு அப்புறம் 6 வது பிளாட்பாரம்னு நெனச்சி போனா அங்க 6 வது பிளாட்பாரம் இல்ல. 5 க்கு அப்புறம் 7th பிளாட்பாரம்தான்  இருந்திச்சி. பெங்களூரு ஆளுங்களுக்கு ராமானுசமே வந்து கணக்கு கத்துகுடுத்தாலும் கணக்கு வராது போல. சரி, என்குயரில  கேக்கலாம்னு அலைஞ்சி திரிஞ்சி என்குயரிய கண்டுபிடிச்சா அங்க நம்ம ஊர் ரேஷன் கட மாதிரி பெரிய க்யு. இது வேலைக்காவதுனு பக்கத்துல  இருக்கறவன் கிட்ட கேட்டா அவன் காத்துல படம்  வரைஞ்சிட்டு போய்ட்டான். அவன் வரைஞ்சத வச்சி நம்பர் இல்லாத பிளாட்பார்ம்க்கு போனா அதுதான் 6 வது பிளாட்பாரம்மாம் ………ஆமாம் 8 வது பிளாட்பாரம்க்கு  தள்ளி இருந்திச்சி. ட்ரெயின் கெளம்ப ரெண்டு நிமிஷன் முன்னாடி S12 அ தேடி போனா S11 க்கு அடுத்து ஒரு பெட்டி கூட இல்ல. பெங்களூரு காரங்களுக்குதான் கணக்கு தெரியலன்னா இந்தியன் ரயில்வேக்குமா?.  ஜீவா S12 முன்னாடி இருக்கும்னு ஓடி போய் பாத்தான் அங்கயும் இல்ல.
“மச்சி! ஒருவே S12 அ  என்ஜின்க்கு முன்னாடி வச்சிருப்பாங்களோ?” ஜீவா
நான் அவன மொறைக்க, ஜீவா என்ஜின்க்கு  முன்னாடி போய் பாத்துட்டு வந்தான்.
“என்ஜின்க்கு  முன்னாடி தண்டவாளம்தாண்டா இருக்கு, S12 இல்ல?” ஜீவா
“நாளைக்கு மட்டும் நான் ஊருக்கு போகலன்னா எனக்கு சங்குதாண்டா” ஜீவா
“ட்ரெயின் வந்திடிச்சி இல்ல. நாளைக்கு மார்னிங் நீ ஊர்ல இருப்ப” நான்
“அது நடக்கலைன்னா நீ சமாதில இருப்ப” ஜீவா
திடீர்னு எல்லாரும் வேகமா ஓட, நாங்களும் பின்னாடியே போனா S12 அ  அப்பதான் சேத்துட்டு இருந்தாங்க. ஒருவழியா உள்ள ஏறி நின்னா எங்க கேபின்ல செம ஃபிகர் ஒன்னு மஞ்ச கலர் டீஷர்ட்டும் ப்ளூ கலர் ஜீன்சும் போட்டுகிட்டு இருந்திச்சி.
“மச்சி! இன்னிக்கி அவ  கரெக்ட் பண்றேன்னு” சொல்லிட்டு ஜீவா அந்த பொண்ணு பக்கத்துல போனான்
“எக்ஸ்க்யூஸ் மீ!” ஜீவா
“பையா(அண்ணா)! ஏ பேக் தோடா ஊப்பர் ரேக்கேகா(இந்த பேக்அ கொஞ்சம் மேல வைக்கிறீங்களா!) ” அந்த பொண்ணு
“போடினு சொல்லிட்டு உள்ள போனான், பின்னாடி வந்த என்னை பாத்து ‘பையா’னு கூப்பிட்டா. ரெண்டு பேரும் கோரசா ‘போடி’ னு சொல்ல அடுத்த அண்ணனுக்காக வலவிரிச்சிட்டு இருந்தா
அவங்கவங்க பெர்த்ல செட்டில் ஆக நீங்க நெனச்ச மாதிரி ட்ரெயின் 15 நிமிஷம் லேட்டா கிளம்பிச்சி.
கொஞ்ச நேரத்துல ‘நாக்க முக்க’ பாட்ட ஹிந்தி, கன்னடா ரெண்டு லாங்குவேஜ்லயும் ஒரே நேரத்துல டப் பண்ணி பாடற மாதிரி ஒரு சவுண்ட்.
லைட்ட போட்டு பாத்தா, ஒரு கன்னடா தாத்தாவும், ஹிந்தி ஃபிகரும்  அவங்க அவங்க ரேஞ்சுக்கு ஹை பிட்ச், லோ பிட்ச்ல கொறட்டை விட்டுகிட்டு இருந்தாங்க. விஜயகாந்த், TR, சரத்குமார், சிம்பு, JK ரித்தீஷ்  எல்லார் படத்தையும் ஒண்ணா பாத்தா எபக்ட்ரா சாமி. ட்ரெயின் சத்தத்த விட இவங்க குறட்டை சத்தம்தான் அதிகமா இருந்திச்சி. அதுக்கப்புறம் எங்க தூங்க. சிவராத்திரிதான். இவங்க விட்ட சத்தத்துல டிரைவர் ட்ரெயின் பஞ்ச்சர் ஆயிடிச்சோன்னு நெனச்சி பங்காரபெட்ல வண்டிய நிறுத்திட்டாரு. ஓவர் மழையால ட்ரெயின் 4 ஹர்ஸ் லேட்.  ஊருக்கு போய் இறங்கின உடனே எதுக்க போனவன் சொன்னான்
“வடைக்கா இந்த நெலமை?”
“என்ன ஆச்சி?” நான்
“அத நீங்களே போய் பாருங்க” அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டான்.  கொஞ்ச தூரம் போனா அந்த வீடு முன்னாடி ஒரே சண்டை. வடைக்கு யாரு கொல்லி போடறதுன்னு பேசிட்டு இருந்தாங்க.
“யாருடா அது வடைன்னு  பேரே புதுசா இருக்கு?” நான்
“சொல்றேன்! அதோ ஒரு பாடி இருக்கே அதுதான் வடை சுடர ஆயா. ”
“அந்த பாடியா?” நான்
“உனக்கு கதை வேணும்னா ஒழுங்கா கேளு”
“ஹ்ம்ம்” நான்
“இவங்கதான் வடை சுடர ஆயா? பேரு மங்காயி. இந்த ஆயா பத்து வயசுல பர்மால இருந்து ஓடி வந்திடிச்சி” ஜீவா
“யார்கூட?” நான்
“போடா பக்கி! அந்த காலத்துல ரங்கூன்க்கும் தமிழ்நாட்டுக்கும் தர்மகப்பல் ஓடிகிட்டு இருந்திச்சி. அப்போ இந்த ஆயாவும் ஓடிவந்திடிச்சி. இங்க வந்து என்னை பொழப்பு பாக்கறதுன்னு தெரியாம,  வட்டிக்கு கடன் வாங்கி ஒரு கடைய போட்டுச்சி. வட்டியவிட ஆயா கடை வடை ரொம்ப பேமஸ் ஆக அக்கம் பக்கத்துல கடை போட்டிருந்தவங்க எல்லாம் ஆயா மேல காண்டாயிட்டாங்க. வட்டிக்கு கடன் குடுத்தவரு வட்டி வாங்கற சாக்குல ஒசிலையே வடைய ஆட்டயபோட்டு  சாப்பிட்டிருக்காரு. ஒரு நாலு ஆயாவையே ஆட்டைய போட்டுடாரு”
“அப்டின்னா……… அதுவா?” நான்
"ஹ்ம்ம்… அதுதான்…. இந்த டீலிங் பிடிச்சிருக்கேன்னு  ஆயாவும் ஒத்துக்கிச்சாம். அப்புறமென்ன.  யா சுட்ட வடையோட சேர்ந்து இவங்களும் ரொம்ப பேமஸ் ஆயிட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சி வட்டி மறுபடியும் ஆயா கிட்ட காசு கேக்க ஆயாக்கும் வட்டிக்கும் சண்ட. ஆயா கடைல இருந்த வடையெல்லாம் எடுத்து வட்டிகாரன் மேல தூக்கி போட்டுட்டு சாபம்விட அன்னிக்கி சாயந்திரமே வட்டி  லோக்கல் பெர்மிட் தண்ணி லாரில அடிபட்டு  செத்து போய்ட்டான்.
அதுக்கப்புறம் ஆயாவ பாத்து ஊரே பயந்திடிச்சி.  இப்படியே விட்டா ஆயா சாபம் விட்டே ஊர காலி பண்ணிடும்ன்னு  நெனச்சி ஊர்ல இருந்தவங்க எல்லா6ம் அடியாள் வச்சி ஆயாவ காலி பண்ண பாத்தாங்க. அடியாள்ல ஒருத்தன் ஆயா அழகில மயங்கி  உன் கடைய நான் பாத்துக்கறேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டான்…
அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் கடைய டெவலப் பண்ணி வடை, போண்டா, பஜ்ஜி, டீ எல்லாம் போட ஆரம்பிச்சாங்க. அங்கதான் கதைல ஒரு ட்விஸ்ட்.
“அங்க கொண்டியா வச்சீங்க?” நான்
“ஆமாம் ஆயா கர்ப்பம் ஆயிட்டாங்க”
“ஒ! லோட்?” நான்
“நாயே! நான் எவ்ளோ டீசென்டா சொல்றேன். இங்க ஆயாவோட ஹஸ்பண்டுக்கு பொறுப்பு வந்து விசா எல்லாம் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டான். ஆயா வடை கடையும், கொழந்தையையும் பாத்துகிச்சி. அவன் வெளிநாட்டுல இருந்து சம்பாதிச்சி அனுப்பின பணத்துல வீடெல்லாம் வாங்கி  மசால் வடை மாதிரி தட்டையா இருந்த அவங்க வாழ்க்கை, மெதுவடை மாதிரி ஆயிடிச்சி. இங்கதான் நம்ம கதையோட இன்னொரு ஹீரோ என்ட்ரி குடுக்குறாரு.  அதாவது பொட்டிகடை ராஜேந்திரன். அவரு ஆயா  கடைக்கு  ரெகுலர் கஸ்டமரா ஆயிட்டாரு. இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ கசமுசா ஆயி ஆடு  கசாப்புகடகாரன நம்பர மாதிரி ஆயாவும் ராஜேந்திரன நம்ப ஆரம்பிச்சிடிச்சி.
"அப்ப இவன் வில்லன்டா. ஹீரோ இல்ல"  நான்
"இப்பெல்லாம் கள்ளக்காதல் பன்றவந்தாண்டா ஹீரோ. இதுக்கு நடுவுல  ஆயாவுக்கு அறிமுகமான ஆளுதான் பஸ் டிரைவர்.
“என்னடா இது நல்லகாதல்னு பாத்தா, வெறும் கள்ளக்காதலா….. ச்சே…. கள்ளகாதல்களா வருது” நான்
"ஆயா டவுனுக்கு போறப்ப எல்லாம் பஸ் ஃப்ரீ…..டிரைவர் கடைக்கு வரப்ப எல்லாம் டிரைவருக்கு வடையும் ஃப்ரீ. இத பாத்து ராஜேந்திரனுக்கு ஆயா மேல ஒரு டவுட்"
“இதுல என்ன டவுட். அவனும் பத்தோட பதினொன்னா இருந்துட்டு போக வேண்டியதுதான" நான்
“இவுங்க ரெண்டு போரையும் ராஜேந்திரன் கண்காணிக்க ஆரம்பிச்சான். ஒரு  நாலு பஸ் டிரைவர் ஆயா வீட்டுக்கே வந்திருக்கான். இத பாத்த ராஜேந்திரன் வீட்ல இருந்த உலக்கைய எடுத்து டிரைவர் மண்டை மேலே போட்டிருக்கான். ரெண்டு பேரயும் அடிச்சி தொம்சம் பண்ணிட்டான்.  ஆயாக்கு  கை உடைஞ்சிடிச்சி. ராஜேந்திரனும் ஆயாவும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாங்க. 
இங்கதான் கதைல இன்னொரு ட்விஸ்ட்.
“என்ன! கதைல வேற யாராவது என்ட்ரி குடுக்கறாங்களா?” நான்
“போடா லூசு……வெளிநாடு போன புருஷன் ஊருக்கு வந்துட்டான். நடந்தத கேள்விப்பட்டு என்னபண்ணான் தெரியுமா?” ஜீவா
“தமிழ் படத்துல வர மாதிரி மூணு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டானா?” நான்
“இல்ல! பஞ்சாயத்த கூடிட்டான். பஞ்சாயத்துல இப்ப நாலு பேரு. ஆயா, ஆயா புருஷன், டிரைவர், ராஜேந்திரன்”
“அப்ப இந்த சொம்பு, ஆலமரம், தலைவர் இவங்க எல்லாம் இல்லையா?” நான்
“அது இல்லாம பஞ்சாயத்தா? மொதல்ல ஆயா புருஷன் பேசியிருக்கான்”
“என்ன?” நான்
“மங்காயி கூட இனிமே என்னால வாழ முடியாது. அவ இனிமே எப்டி வேணும்னாலும் போகட்டும். எனக்கு கவலை இல்ல. என் கொழந்தைய மட்டும் கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டான். தலைவர் கொழம்பி போய் ராஜேந்திரன கேட்டாரு
“அவன் என்ன சொன்னான்?” நான்
"அவ மேல நான் உசிரையே வச்சிருக்கேன். அவ எப்டிங்க எனக்கு துரோகம் பண்ணலாம். அதுதான் என்னால தாங்க முடியல. நான் ள அவ மன்னிக்கவே மாட்டேன். இவங்க ரெண்டு பேர்ல யாராவது அவ வச்சி காப்பாத்தட்டும்ன்னு சொல்லிட்டு அவனும் போய்ட்டான்"
“டேய்! இப்டி எவனாவது பேசுவானா. சொந்த பொண்டாட்டியகூட யாரும் இவ்ளோ உரிமையோட பேசமாட்டாங்க. சரி அப்போ அந்த அடி வாங்கினவன் என்ன சொன்னான்?” நான்
நான் இவள ரொம்ப நல்லவன்னு நெனச்சிதான் பழகினேன். இவ இவ்ளோ பெரிய பிராட்னு தெரிஞ்சிருந்தா நான் இவ கூட பழகியிருக்க மாட்டேன்.  சம்பவத்து அன்னைக்கு கூட இவ புருஷன்தான் வந்துட்டான்னு நெனச்சி அடிய தாங்கிட்டே ஓடிட்டேன். இல்லன்னா நானும் அவன திருப்பி அடிச்சிருப்பேன். எனக்கு இவள பாத்தாவே பயமா இருக்கு. நான் இனிமே இவ இருக்க பக்கம்கூட  தலைவச்சி படுக்க மாட்டேன்னு சொல்லிட்டு அவனும் போய்ட்டான்.
“அப்புறம் என்ன ஆச்சி?” நான்
“அவ்ளோதான். எல்லாரும் பஞ்சாயத்துல அபராதம் கட்டிட்டு போய்ட்டாங்க.  டிரைவர் ஏற்கனவே ஆயாக்கு பணம் தந்திருந்ததால அவகிட்ட வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான்”
"ஆயாவ யாருமே சேத்துக்கலையா?" நான்
"ஆமாம். தலைவர்தான் ஆயாவுக்கு கடைசி வரைக்கும் ஆதரவு தந்தாரு.  அவரு தயவுலதான் ஆயா இந்த ஊர்ல தைரியமா வாழ்ந்துகிட்டு இருந்திச்சி" ஜீவா
"அப்போ அந்த டீ கடை பாய்லர் " நான்
அது அப்பவே கொஞ்சம் கொஞ்சமா சின்னதாயி ஒரு நாள் பழைய வடை கடையாவே ஆயிடிச்சி. ஆயா வீட்டையும் வித்திடிச்சி. இப்போ அந்த கூரைதான் ஆயாவுக்கு எல்லாம். தலைவரும் போன மாசம் செத்துபோய்ட்டாரு"
“என்ன கதைடா இது. ஆயா கூட யார் யார் இருந்தாங்கன்னே தெரியலையேடா. ஒரே கொழப்பமா இருக்கே. ஆயா லிஸ்ட்ல  இவ்ளோ பேரா. ஊரெல்லாம் சின்னவீடு வச்சிருந்தவங்கள பத்தி கேள்விபட்டிருக்கேன். இந்த ஆயா ஊரையே சின்னவீடா வச்சிருந்திருக்கே. இப்ப என்னதான் பிரச்சனை?" நான்
“ஆயாவுக்கு கொல்லி போடறது யாரு?” ஜீவா
“அதான் ஒரு ஊரே இருக்கே. யாரையாவது கொல்லி வைக்க சொல்லுங்க. இல்ல சீட்டெழுதி குலுக்கி போட்டு கண்டுபிடிங்க. இது ஒரு பெரிய பிரச்சனையா?” நான்
“அதுதான் பிரச்சனையே. அந்த லிஸ்ட் இன்னும் பெருசு. ஆயாவுக்கு கொல்லி போட்டா உண்மை வெளிய தெரிஞ்சிடும்னு யாரும் வரமாட்டாங்க. சோ, நிலால வடை சுடர ஆயாக்கு என்ன நிலைமையோ அதே நெலைமதான் இந்த ஆயாக்கும்” ஜீவா
நானும் எவ்ளோ கள்ளகாதல பத்தி கேட்டிருக்கேன். இது கொஞ்சம் வித்தியாசமானது. இது மாதிரி நெறைய கதைய ஜீவா சொன்னான். சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தாங்கன்னு எப்டி என்னால கண்டுபிடிக்க  முடியலையோ அதே மாதிரி ஆயாக்கு யாரு கொல்லி வச்சான்னும்  என்னால கண்டுபிடிக்க முடியல.
ஊருக்கு திரும்பி வரும் வழியில் நான் அவனிடம் அதை  கூறினேன்.
“நான் ஒரு 30 வருஷம் முன்னாடியே பொறந்திருக்கலாம்” நான்
“அதுக்கென்ன பண்ண முடியும்……… வடை போச்சே” ஜீவா
நாங்க ரெண்டு பேரும் பஸ்ஸ்டாண்டுல நிக்கும்போது................
“அதோ போதே அதுதான் அந்த ஆயாவோட பேத்தியாம். பாட்டி செத்தத கேள்வி பட்டு ஒரிசால  இருந்து வந்திருக்காம்.  அடுத்த வாரம்  அவங்க குடும்பமே இங்க வந்து போண்டா கடை போடபோராங்கலாம்” அப்டின்னு ரெண்டு பேரு பேசிட்டே போனாங்க
“மச்சி! உனக்கு அடுத்த கதை ரெடிடா” நான்
“என்ன கதைடா?” ஜீவா
“பேத்தி சுட்ட போண்டா”


Sunday, September 18, 2011

நகர்வலம்

 
தூக்கம் வராத இரவொன்றில் தேரும் சேனையும் அற்ற நகர்வலத்தில் நானே முடிசூடா மன்னன்இரவின் தனிமை மிகவும் மென்மையானது.  சாலையோரத்தில் நிறுத்திவைக்கபட்டிருக்கும் வாகனங்கள்,  குளிரில் மேலாடையை போர்வையாக போர்த்திக்கொள்ளும் தெருவோர ஏழைச்சிறுவன்பகலிலே கல்லடிக்கு பயந்து இரவிலே தனக்கான உணவை தேடும் நாய்கள்,  சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் சட்டென்று தோன்றி மறையும் நிழல் இவைகளை எல்லோராலும் ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்தது. இரைச்சல்அங்கும் இங்கும் ஓடித்திரியும் மனிதர்கள் இவைகளிடம் இருந்து விடைபெற்று விட்டில் பூச்சிகளின் மெல்லிய ரீங்காரத்தை தாலாட்டாக கொண்டு இரவு தனது தூக்கத்தை தொடர்ந்துகொண்டிருந்தது

சிறுவயதில் இரவில் சிறுநீர் கழிக்ககூட அம்மாவை துணைக்கழைத்த எனக்கு இரவின் மீதான ரசனை நாளடைவில் அதிகமானதின் ஊரறிந்த ரகசியத்தை தினம்தோறும் இரவிடமே கேட்கிறேன். என்னுடைய இந்த செய்கையால் எனக்கு எல்லோரிடமிருந்து அறிவுரையும் சில சமயம் வசவுகளும் கிடைத்ததுஇரவெல்லாம் விழித்திருந்துவிட்டு பின்னிரவுமணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி காலை 5 மணிக்கு வீட்டுகதவை தட்டினால் ஒரு சொம்பு தண்ணீருடன் திட்டுகளும் இலவசமே.
நான் இரவுடன் உணர்வு பரிமாற்றங்களை தொடங்கியிருந்த வேளையில் எங்கோ காற்றை கிழித்துசென்ற காரின் சத்தம் கலைத்தது. சிகரெட்டை பற்றவைத்துகொண்டே அருகில் உள்ள பெஞ்ச் மீது அமர்ந்தபோது மணி 1.25am ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் அவனும் அருகில் வந்தமர்ந்தான். அவனை அதற்குமுன் அந்த இடத்தில் நான் பார்த்ததில்லை. கட்டம் போட்ட சட்டையும்ஜீன்ஸ்ம் அணிந்து பார்ப்பதற்கு மேற்குடியில் பிறந்தவன்போல் இருந்தான். வயது ஒரு 25 இருக்கலாம்.
ஹாய்! ஐ அம் முருகன்என்றான் என்னை பார்த்து.
சரி! இருக்கட்டும் அதுக்கென்ன இப்போ?”  நான்
என்ன சார்! கோபபட்றீங்க?” - முருகன்
உன்ன நான் இந்த ஏரியால பாத்ததில்லையே? யார் நீ?” நான்
என் வீடு பக்கத்துலதான் சார் . நான் இங்கவந்து ஒரு வருஷம் ஆச்சி .நான் இங்க உங்கள அடிக்கடி பாக்கறேனே…..நைட்னா அவ்ளோ பிடிக்குமா?”  – முருகன்
ஹ்ம்ம்
எனக்கும் நைட்னா பிடிக்கும் சார். இரவோட அழகு பகல்லதான் புரியும்” - முருகன்
பின்னர் அவன் ஏதேதோ பேசிக்கொண்டே சென்றான். மொத்தத்தில் அவனுக்கு சகமனிதர்களை பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. அவன் இரவை விவரித்த விதமும் பிடித்துபோனது. எங்களுக்குள் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றியது. நான் அவன் பேச்சில் தற்காலிகமாக மூழ்கிகொண்டிருந்தேன். உலகமெல்லாம் என்னை இழுத்துச்சென்று அந்த கேள்வியை கேட்டான்.
சார்இப்டி நைட்ல சுத்துறீங்களேஉங்களுக்கு பயமா இல்லையா?”
இது எனக்கு பழக்கபட்ட ஊருதான். இங்க என்ன பயம்?” – நான்
இல்ல சார்! பேய் அது இதுன்னு எல்லாரும் பயப்படுவாங்க…. அதான் கேட்டேன்வேற ஒண்ணுமில்ல
எனக்கு பேய் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல. பாத்த அனுபவம் உண்டு. ஆனா, அது பேயா இல்லையான்னு இதுவரைக்கும் தெரியல?” – நான்
பாத்திருக்கீங்களாஎன்ன சார் பாத்தீங்க?” - முருகன்
அவன் மிகவும் வற்புறுத்தி கேட்டதால்நானும் அந்த சம்பவத்தை கூறினேன். எனக்கு ஒரு 12 வயது இருந்திருக்கும். எங்கள் சொந்த ஊரான மாயவரத்தின் அருகில் உள்ள ஊரில் ஓம்முருகா என்று ஒரு டூரிங் டாகீஸ் உள்ளதுதினமும் டிக்கெட் கொடுக்கும் முன் கே பி சுந்தராம்பாள் ஞானபழத்தை பிழிவார்அதுதான் அறிகுறி……..எனக்கு டாக்கீஸை பிடித்ததோ இல்லையோ…….ஞானப்பழம் பாடல் பிடித்துப்போனதுஅன்று எங்கள் ஊரில் திருவிழாதிருவிழாக்கு முன்னர் ஊர்காவல் தெய்வமான முனீஸ்வரனுக்கு பொங்கல் வைக்கவேண்டும்….அந்த கோயிலின் பெயர் பாலகரையான்…. சுருக்கமாக மண்ணுக்கு நேர்ந்துவிட்ட மாணிக்கநேசர்அதற்கும் ஆண்களே செல்லவேண்டும்…. கோழி கூவுவதற்கு முன் பொங்கல் வைத்து படைக்கவேண்டும்.
அது எங்கள் குலதேய்வமாகிபோன காரணத்தினால் நானும் என் தந்தையும் ஏதோ ஒரு படம் பார்த்துவிட்டு சிறிது விறகுகளை வெட்டிக்கொண்டு நடுரோட்டில் வந்தமர்ந்தோம்என் தந்தையின் பழைய  HMT வாட்சில் மணி இரவு 1.10  காட்டியதுயாராவது ஒரு மணிக்கு பொங்கல் வைப்பார்களாஎன் தந்தை அவர்களின் நண்பர்களுக்காக காத்திருக்க யாரும் வரவில்லைதூரத்தில் ஒரு பனைமரம் ஒன்று தெரிந்தது. நான் பகலில் பார்த்து பழக்கப்பட்ட அதே ஒற்றை பனைமரம். சிறிது நேரத்தில் இன்னொரு பனைமரம் அதற்கருகில் தெரிந்ததுஅது கொஞ்சம் கொஞ்சமாக எங்களை நோக்கிவர நான் என் தந்தையிடம் என்னவென்று கேட்க….என் கண்களில் தெரிந்த பயம் என் தந்தையின் கண்களிலும் தொற்றிகொண்டது…. நானும் என் தந்தையும் அருகிலிருந்த கூரைக்குள் ஒளிந்துகொண்டோம். அந்த கருப்பு நிழல் எங்களை கடந்து குலதெய்வகோயிலை நோக்கிசென்றது.
என் தந்தை அதுதாண்டா அய்யா (முனீஸ்வரன்) . நம்ம சாமி. நீ பயப்படாதஎன் கூடவே இரு என்று சமாதானம் சொல்லி என்னையும் அந்த கோவிலுக்கு அழைத்துச்சென்றார்நள்ளிரவு. ஒரு சிறிய கோபுரம். அதன் உள்ளே ஒரு சிறிய சிலை. அதற்கு நேர் எதிரே கம்பீரமாய் கையில் அரிவாளுடன் முனீஸ்வரன். சுற்றியும் தென்னை மரங்கள். எங்கள் இருவரை தவிர வேறுயாரும் இல்லை.
நாங்கள் அடுப்பை பற்றவைக்கும் முயற்சியில் 18 முறை தோற்றுப்போனோம். மண்ணெண்ணையும் உதவி செய்யவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் விழித்த வேளையில் ஒரு வயசான கிழவி எங்களை நோக்கிவந்தாள்
"இங்க என்னப்பா செய்றீங்க?” – கிழவி
திருவிழா இல்லஅதான் பொங்கல் வைக்கலாம்னு வந்தோம் பாட்டிஎன் தந்தை
சாமிக்கு கற்பூரம் ஏத்திட்டு வைங்கப்பா”.என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஞானப்பழம் சீக்கிரமாக பிழியபட்டதாலோ என்னவோ நாங்கள் கற்பூரம் வாங்கவில்லை. இப்போது எங்கே சென்று வாங்குவது. சிறிது யோசனைக்குப்பின் என் தந்தை என்னை சிலையின் கீழே உட்கார்த்தி வைத்துவிட்டு கற்பூரம் வாங்க கடைக்குசென்று. பின் கடைக்காரனை எழுப்பி வாங்கிவந்தார் போல. 10 நிமிடமாக இருந்தாலும் அன்று எனக்கு அல்லு இல்லை. பெரியவனான பின் முனீஸ்வரன்தான் கிழவி ரூபத்தில் வந்தார் என்றாரே பார்க்கலாம். யாருக்கு தெரியும். அது உண்மையாக கூட இருக்கலாம். ஏனெனில், பெண்கள் அந்த கோவிலுக்கு செல்லமாட்டார்கள்ஊருக்கு ஆகாதென்று கோவிலையே ஊர் எல்லையில் ஊரைவிட்டு வெளியே பார்த்தமாதிரி கட்டியிருப்பார்கள்
பின்நானும் பேயின் மீது ஆர்வம் கொண்டு அமானுஷ்யங்களை பற்றி படித்து ஆவியை வரவழைக்க தவளை ரத்தம்கோழி இறகுதலைச்சன் பையன் காலடி மண், மயிர், இன்னும் பல பொருட்களை( மண்டை ஓடு கிடைக்கவில்லைஅதனால், சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புசேர்த்து முயற்சிசெய்த நாளில் காய்ச்சல் வந்து படுத்துகொண்டதின் காரணம் இன்றுவரை புரியவில்லை. விஷயம் என் தந்தைக்கு தெரிந்து என்னை பேயடி அடித்துவிட்டார். எல்லாம்முடிந்தது.
முருகன் கதையை கேட்டு சிரித்துகொண்டிருந்தான்.
சரி சார்! நீங்க பேய் இருக்குன்னு நம்புறீங்களா?” - முருகன்
"இல்லை" -  நான்
அது எப்டி சார்? கடவுள் என்ற ஒரு நல்லசக்தி இருக்கிற வரைக்கும் தீயசக்தினு ஒன்னு இருக்கும். இந்த உலகத்துல ஆசை நிறைவேறாம செத்துபோறவங்க, கடமைய சரியாக செய்யாதவர்கள், அடுத்தவன் மனைவியை புசித்தவர்கள், கணவனுக்கு துரோகம் செய்தவர்கள், செங்கோல் ஆட்சி புரிய தவறியவர்கள் எல்லோரும் பேயாக அலையணும்னு தமிழ் சாஸ்திரத்துலையே சொல்லியிருக்காங்களே. அவங்க சொல்லவரத எதாவது ஒரு ஊடகம் வழியசொல்றாங்க. அவங்க ஆசைய வேற ஒருத்தர் உடம்புல புகுந்து நிறைவேத்திக்குறாங்க. இதெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா?”
அதெல்லாம் புரளி. எல்லாம் 'மாடுகண்ல MGR தெரியுறாருஎன்ற மாதிரிதான்ஒரு உடல்ல ஒரு உயிர் இருக்கிறவரைக்கும் இன்னொரு உயிர் அந்த உடல்ல போகமுடியாது. பேய் பிடிச்சிருக்குனு சொல்றதெல்லாம் ஒரு வகையான மனநோய்தான்நீ சொல்றபடி பாத்தா இங்க சாகரவங்க எல்லாம் பேயாதான் அலையணும். எனக்கு தெரிஞ்சவரைக்கும் பேயும் இல்ல, சாமியும் இல்லஎன்று கூறிவிட்டு அடுத்த சிகரெட்டை பற்றவைத்தேன்"
சரி சார்! நீங்க பேசினதெல்லாம் கேட்டு எனக்கு தூக்கம் வருதுநாம நாளைக்கு மீட் பண்ணலாம் சார். நான் சொன்னத நீங்க சீக்கிரமே ஒத்துக்குவீங்கஇப்போ நான் கெளம்புறேன் சார். குட் நைட்” -  முருகன்

அவன் சென்றதும் ஒரு இனம்புரியாத புதிய மனநிலை ஏற்பட்டதுநானும் பேயைபற்றி சிந்தித்து கொண்டே உறங்கிப்போனேன்எழுந்து பார்க்கையில் மணி மதியம் மூன்றாகிவிட்டிருந்தது.
குளித்துவிட்டு வெளியே செல்கையில்தான் கவனித்தேன். வீட்டின் சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரில், முதலாமாண்டு கண்ணீர் அஞ்சலியுடன் முருகன் சிரித்துக்கொண்டிருந்தான்அதன் பிறகு நானும் நகர்வலம் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.




Powered by Blogger.

Followers

About Me