கிறிஸ்துமஸ் வெகேஷன். சும்மாதான இருக்க போற! வா எங்க ஊருக்கு போகலாம்னு ஜீவா கூப்ட கிறிஸ்துமஸ் ரெடி……….நானும் ரெடி. நம்ம ஊர்ல நல்ல நாள்லயே பஸ்ல கூட்டமா இருக்கும். பண்டிகைன்னா கேக்கவா வேணும். அதனாலதான் நானும் ஜீவாவும் ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணோம்.
சீக்கிரம் வாடா? என்று ஜீவாவை அழைத்துக்கொண்டு வேகவேகமாக வீட்டுக்கு வெளியவர, எங்களுக்காகவே காத்துகொண்டிருந்தது போல மழை படபடவென பெய்ய ஆரம்பித்தது.
சீக்கிரம் வாடா? என்று ஜீவாவை அழைத்துக்கொண்டு வேகவேகமாக வீட்டுக்கு வெளியவர, எங்களுக்காகவே காத்துகொண்டிருந்தது போல மழை படபடவென பெய்ய ஆரம்பித்தது.
“இது வேறயா?. இன்னைக்கி நாம ஊருக்கு போனா மாதிரிதான்” ஜீவா
“விடு மச்சி! சீக்கிரம் போய்டலாம். தடுக்கி விழுந்தா வேலூர்” என்று சொன்னப்பவே நான் ஒரு சின்ன காவாயில் தடுக்கிவிழ.
“என்னடா! வேலூர் வந்தாச்சா?” ஜீவா
“நக்கலா. தூக்கி விட்ரா?” நான்
ஒரு வழியா நாங்களும் மடிவாலா பஸ் ஸ்டாப்க்கு வந்து சேந்தா எந்த பஸ்சும் வந்தாமாதிரி தெரில. அப்படியே வந்தாலும் நிக்கிற மாதிரி தெரியல.
“என்னடா நைட் 10.30கு இவ்ளோ கூட்டம். இவங்க எல்லாருமே மஜெஸ்டிக்குதான் போறாங்களா?” ஜீவா
“தெரியலடா”
“ஹைபோதேடிகல் கொஸ்டின் இல்ல மச்சி” ஜீவா
“மண்ணாங்கட்டி! 11.30கு ட்ரெயின்டா. பஸ்ல போனா ட்ரைன பிடிக்கறது கஷ்டம். வா ஆட்டோல போலாம்” நான்
“அவன் பாதி தலையை மட்டும் ஆட்டிட்டு மூஞ்சிய திருப்பிகிட்டான்”. நானும் பக்கத்துல இருந்த ஆட்டோல கேட்டேன்
“அண்ணே! மெஜெஸ்டிக் போனும். எவ்ளோ?”
250 rs
“70 rs?” நான்
“பஸ்ஸல்லி 50 rs”. அதுக்கு மேல என்னால பேச முடியல. கடைசில வேற வழியில்லாம நானும் ஜீவாவும் ஆட்டோல போனோம். ஸ்டார்டிங்ல ப்ரெட் லீ பௌலிங் மாதிரி செம ஸ்பீட்ல போன ஆட்டோ மெஜஸ்டிக் கிட்ட வரவர R P சிங்க் பௌலிங் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஸ்லொவ் ஆயி சென்டிமீட்டர் சென்டிமீடரா மூவ் ஆகா ஆரம்பிச்சிடிச்சி. நடந்து போனவங்க எல்லாம் எங்கள மொரச்சிட்டு ஓவர்டேக் பண்ணி போனாங்க. நானும் கோவம் வந்து "ஒரு சுறாவளி கிளம்பியதே" ஸ்டைல்ல ஜீவாவ கூட்டிகிட்டு நடந்து கொஞ்ச தூரம்தான் போனோம். அதுக்குள்ள நடக்கரவங்களுக்குள்ள ட்ராபிக். ஒரு வழியா ஃபியர் ஃபாக்டர்ல வரவங்க மாதிரி அட்வென்ச்சர் எல்லாம் பண்ணி ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்சேந்தோம்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நாங்க போய் சேந்தப்ப மணி 11.20. காவேரி எக்ஸ்பிரஸ் 6 வது பிளாட்பாரம்னு இருந்திச்சி.
நாங்க பெங்களூருக்கு புதுசு. அதனால 5 க்கு அப்புறம் 6 வது பிளாட்பாரம்னு நெனச்சி போனா அங்க 6 வது பிளாட்பாரம் இல்ல. 5 க்கு அப்புறம் 7th பிளாட்பாரம்தான் இருந்திச்சி. பெங்களூரு ஆளுங்களுக்கு ராமானுசமே வந்து கணக்கு கத்துகுடுத்தாலும் கணக்கு வராது போல. சரி, என்குயரில கேக்கலாம்னு அலைஞ்சி திரிஞ்சி என்குயரிய கண்டுபிடிச்சா அங்க நம்ம ஊர் ரேஷன் கட மாதிரி பெரிய க்யு. இது வேலைக்காவதுனு பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேட்டா அவன் காத்துல படம் வரைஞ்சிட்டு போய்ட்டான். அவன் வரைஞ்சத வச்சி நம்பர் இல்லாத பிளாட்பார்ம்க்கு போனா அதுதான் 6 வது பிளாட்பாரம்மாம் ………ஆமாம் 8 வது பிளாட்பாரம்க்கு தள்ளி இருந்திச்சி. ட்ரெயின் கெளம்ப ரெண்டு நிமிஷன் முன்னாடி S12 அ தேடி போனா S11 க்கு அடுத்து ஒரு பெட்டி கூட இல்ல. பெங்களூரு காரங்களுக்குதான் கணக்கு தெரியலன்னா இந்தியன் ரயில்வேக்குமா?. ஜீவா S12 முன்னாடி இருக்கும்னு ஓடி போய் பாத்தான் அங்கயும் இல்ல.
“மச்சி! ஒருவேள S12 அ என்ஜின்க்கு முன்னாடி வச்சிருப்பாங்களோ?” ஜீவா
நான் அவன மொறைக்க, ஜீவா என்ஜின்க்கு முன்னாடி போய் பாத்துட்டு வந்தான்.
“என்ஜின்க்கு முன்னாடி தண்டவாளம்தாண்டா இருக்கு, S12 இல்ல?” ஜீவா
“நாளைக்கு மட்டும் நான் ஊருக்கு போகலன்னா எனக்கு சங்குதாண்டா” ஜீவா
“ட்ரெயின் வந்திடிச்சி இல்ல. நாளைக்கு மார்னிங் நீ ஊர்ல இருப்ப” நான்
“அது நடக்கலைன்னா நீ சமாதில இருப்ப” ஜீவா
திடீர்னு எல்லாரும் வேகமா ஓட, நாங்களும் பின்னாடியே போனா S12 அ அப்பதான் சேத்துட்டு இருந்தாங்க. ஒருவழியா உள்ள ஏறி நின்னா எங்க கேபின்ல செம ஃபிகர் ஒன்னு மஞ்ச கலர் டீஷர்ட்டும் ப்ளூ கலர் ஜீன்சும் போட்டுகிட்டு இருந்திச்சி.
“மச்சி! இன்னிக்கி அவள கரெக்ட் பண்றேன்னு” சொல்லிட்டு ஜீவா அந்த பொண்ணு பக்கத்துல போனான்
“எக்ஸ்க்யூஸ் மீ!” ஜீவா
“பையா(அண்ணா)! ஏ பேக் தோடா ஊப்பர் ரேக்கேகா(இந்த பேக்அ கொஞ்சம் மேல வைக்கிறீங்களா!) ” அந்த பொண்ணு
“போடினு சொல்லிட்டு உள்ள போனான், பின்னாடி வந்த என்னை பாத்து ‘பையா’னு கூப்பிட்டா. ரெண்டு பேரும் கோரசா ‘போடி’ னு சொல்ல அடுத்த அண்ணனுக்காக வலவிரிச்சிட்டு இருந்தா
அவங்கவங்க பெர்த்ல செட்டில் ஆக நீங்க நெனச்ச மாதிரி ட்ரெயின் 15 நிமிஷம் லேட்டா கிளம்பிச்சி.
கொஞ்ச நேரத்துல ‘நாக்க முக்க’ பாட்ட ஹிந்தி, கன்னடா ரெண்டு லாங்குவேஜ்லயும் ஒரே நேரத்துல டப் பண்ணி பாடற மாதிரி ஒரு சவுண்ட்.
லைட்ட போட்டு பாத்தா, ஒரு கன்னடா தாத்தாவும், ஹிந்தி ஃபிகரும் அவங்க அவங்க ரேஞ்சுக்கு ஹை பிட்ச், லோ பிட்ச்ல கொறட்டை விட்டுகிட்டு இருந்தாங்க. விஜயகாந்த், TR, சரத்குமார், சிம்பு, JK ரித்தீஷ் எல்லார் படத்தையும் ஒண்ணா பாத்தா எபக்ட்ரா சாமி. ட்ரெயின் சத்தத்த விட இவங்க குறட்டை சத்தம்தான் அதிகமா இருந்திச்சி. அதுக்கப்புறம் எங்க தூங்க. சிவராத்திரிதான். இவங்க விட்ட சத்தத்துல டிரைவர் ட்ரெயின் பஞ்ச்சர் ஆயிடிச்சோன்னு நெனச்சி பங்காரபெட்ல வண்டிய நிறுத்திட்டாரு. ஓவர் மழையால ட்ரெயின் 4 ஹர்ஸ் லேட். ஊருக்கு போய் இறங்கின உடனே எதுக்க போனவன் சொன்னான்
“வடைக்கா இந்த நெலமை?”
“என்ன ஆச்சி?” நான்
“அத நீங்களே போய் பாருங்க” அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டான். கொஞ்ச தூரம் போனா அந்த வீடு முன்னாடி ஒரே சண்டை. வடைக்கு யாரு கொல்லி போடறதுன்னு பேசிட்டு இருந்தாங்க.
“யாருடா அது வடைன்னு பேரே புதுசா இருக்கு?” நான்
“சொல்றேன்! அதோ ஒரு பாடி இருக்கே அதுதான் வடை சுடர ஆயா. ”
“அந்த பாடியா?” நான்
“உனக்கு கதை வேணும்னா ஒழுங்கா கேளு”
“ஹ்ம்ம்” நான்
“இவங்கதான் வடை சுடர ஆயா? பேரு மங்காயி. இந்த ஆயா பத்து வயசுல பர்மால இருந்து ஓடி வந்திடிச்சி” ஜீவா
“யார்கூட?” நான்
“போடா பக்கி! அந்த காலத்துல ரங்கூன்க்கும் தமிழ்நாட்டுக்கும் தர்மகப்பல் ஓடிகிட்டு இருந்திச்சி. அப்போ இந்த ஆயாவும் ஓடிவந்திடிச்சி. இங்க வந்து என்னை பொழப்பு பாக்கறதுன்னு தெரியாம, வட்டிக்கு கடன் வாங்கி ஒரு கடைய போட்டுச்சி. வட்டியவிட ஆயா கடை வடை ரொம்ப பேமஸ் ஆக அக்கம் பக்கத்துல கடை போட்டிருந்தவங்க எல்லாம் ஆயா மேல காண்டாயிட்டாங்க. வட்டிக்கு கடன் குடுத்தவரு வட்டி வாங்கற சாக்குல ஒசிலையே வடைய ஆட்டயபோட்டு சாப்பிட்டிருக்காரு. ஒரு நாலு ஆயாவையே ஆட்டைய போட்டுடாரு”
“அப்டின்னா……… அதுவா?” நான்
"ஹ்ம்ம்… அதுதான்…. இந்த டீலிங் பிடிச்சிருக்கேன்னு ஆயாவும் ஒத்துக்கிச்சாம். அப்புறமென்ன. ஆயா சுட்ட வடையோட சேர்ந்து இவங்களும் ரொம்ப பேமஸ் ஆயிட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சி வட்டி மறுபடியும் ஆயா கிட்ட காசு கேக்க ஆயாக்கும் வட்டிக்கும் சண்ட. ஆயா கடைல இருந்த வடையெல்லாம் எடுத்து வட்டிகாரன் மேல தூக்கி போட்டுட்டு சாபம்விட அன்னிக்கி சாயந்திரமே வட்டி லோக்கல் பெர்மிட் தண்ணி லாரில அடிபட்டு செத்து போய்ட்டான்.
அதுக்கப்புறம் ஆயாவ பாத்து ஊரே பயந்திடிச்சி. இப்படியே விட்டா ஆயா சாபம் விட்டே ஊர காலி பண்ணிடும்ன்னு நெனச்சி ஊர்ல இருந்தவங்க எல்லா6ம் அடியாள் வச்சி ஆயாவ காலி பண்ண பாத்தாங்க. அடியாள்ல ஒருத்தன் ஆயா அழகில மயங்கி உன் கடைய நான் பாத்துக்கறேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டான்…
அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் கடைய டெவலப் பண்ணி வடை, போண்டா, பஜ்ஜி, டீ எல்லாம் போட ஆரம்பிச்சாங்க. அங்கதான் கதைல ஒரு ட்விஸ்ட்.
“அங்க கொண்டியா வச்சீங்க?” நான்
“ஆமாம் ஆயா கர்ப்பம் ஆயிட்டாங்க”
“ஒ! லோட்?” நான்
“நாயே! நான் எவ்ளோ டீசென்டா சொல்றேன். இங்க ஆயாவோட ஹஸ்பண்டுக்கு பொறுப்பு வந்து விசா எல்லாம் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டான். ஆயா வடை கடையும், கொழந்தையையும் பாத்துகிச்சி. அவன் வெளிநாட்டுல இருந்து சம்பாதிச்சி அனுப்பின பணத்துல வீடெல்லாம் வாங்கி மசால் வடை மாதிரி தட்டையா இருந்த அவங்க வாழ்க்கை, மெதுவடை மாதிரி ஆயிடிச்சி. இங்கதான் நம்ம கதையோட இன்னொரு ஹீரோ என்ட்ரி குடுக்குறாரு. அதாவது பொட்டிகடை ராஜேந்திரன். அவரு ஆயா கடைக்கு ரெகுலர் கஸ்டமரா ஆயிட்டாரு. இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ கசமுசா ஆயி ஆடு கசாப்புகடகாரன நம்பர மாதிரி ஆயாவும் ராஜேந்திரன நம்ப ஆரம்பிச்சிடிச்சி.
"அப்ப இவன் வில்லன்டா. ஹீரோ இல்ல" நான்
"இப்பெல்லாம் கள்ளக்காதல் பன்றவந்தாண்டா ஹீரோ. இதுக்கு நடுவுல ஆயாவுக்கு அறிமுகமான ஆளுதான் பஸ் டிரைவர்.
“என்னடா இது நல்லகாதல்னு பாத்தா, வெறும் கள்ளக்காதலா….. ச்சே…. கள்ளகாதல்களா வருது” நான்
"ஆயா டவுனுக்கு போறப்ப எல்லாம் பஸ் ஃப்ரீ…..டிரைவர் கடைக்கு வரப்ப எல்லாம் டிரைவருக்கு வடையும் ஃப்ரீ. இத பாத்து ராஜேந்திரனுக்கு ஆயா மேல ஒரு டவுட்"
“இதுல என்ன டவுட். அவனும் பத்தோட பதினொன்னா இருந்துட்டு போக வேண்டியதுதான" நான்
“இவுங்க ரெண்டு போரையும் ராஜேந்திரன் கண்காணிக்க ஆரம்பிச்சான். ஒரு நாலு பஸ் டிரைவர் ஆயா வீட்டுக்கே வந்திருக்கான். இத பாத்த ராஜேந்திரன் வீட்ல இருந்த உலக்கைய எடுத்து டிரைவர் மண்டை மேலே போட்டிருக்கான். ரெண்டு பேரயும் அடிச்சி தொம்சம் பண்ணிட்டான். ஆயாக்கு கை உடைஞ்சிடிச்சி. ராஜேந்திரனும் ஆயாவும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாங்க.
இங்கதான் கதைல இன்னொரு ட்விஸ்ட்.
“என்ன! கதைல வேற யாராவது என்ட்ரி குடுக்கறாங்களா?” நான்
“போடா லூசு……வெளிநாடு போன புருஷன் ஊருக்கு வந்துட்டான். நடந்தத கேள்விப்பட்டு என்னபண்ணான் தெரியுமா?” ஜீவா
“தமிழ் படத்துல வர மாதிரி மூணு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டானா?” நான்
“இல்ல! பஞ்சாயத்த கூடிட்டான். பஞ்சாயத்துல இப்ப நாலு பேரு. ஆயா, ஆயா புருஷன், டிரைவர், ராஜேந்திரன்”
“அப்ப இந்த சொம்பு, ஆலமரம், தலைவர் இவங்க எல்லாம் இல்லையா?” நான்
“அது இல்லாம பஞ்சாயத்தா? மொதல்ல ஆயா புருஷன் பேசியிருக்கான்”
“என்ன?” நான்
“மங்காயி கூட இனிமே என்னால வாழ முடியாது. அவ இனிமே எப்டி வேணும்னாலும் போகட்டும். எனக்கு கவலை இல்ல. என் கொழந்தைய மட்டும் கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டான். தலைவர் கொழம்பி போய் ராஜேந்திரன கேட்டாரு
“அவன் என்ன சொன்னான்?” நான்
"அவ மேல நான் உசிரையே வச்சிருக்கேன். அவ எப்டிங்க எனக்கு துரோகம் பண்ணலாம். அதுதான் என்னால தாங்க முடியல. நான் ள அவள மன்னிக்கவே மாட்டேன். இவங்க ரெண்டு பேர்ல யாராவது அவள வச்சி காப்பாத்தட்டும்ன்னு சொல்லிட்டு அவனும் போய்ட்டான்"
“டேய்! இப்டி எவனாவது பேசுவானா. சொந்த பொண்டாட்டியகூட யாரும் இவ்ளோ உரிமையோட பேசமாட்டாங்க. சரி அப்போ அந்த அடி வாங்கினவன் என்ன சொன்னான்?” நான்
நான் இவள ரொம்ப நல்லவன்னு நெனச்சிதான் பழகினேன். இவ இவ்ளோ பெரிய பிராட்னு தெரிஞ்சிருந்தா நான் இவ கூட பழகியிருக்க மாட்டேன். சம்பவத்து அன்னைக்கு கூட இவ புருஷன்தான் வந்துட்டான்னு நெனச்சி அடிய தாங்கிட்டே ஓடிட்டேன். இல்லன்னா நானும் அவன திருப்பி அடிச்சிருப்பேன். எனக்கு இவள பாத்தாவே பயமா இருக்கு. நான் இனிமே இவ இருக்க பக்கம்கூட தலைவச்சி படுக்க மாட்டேன்னு சொல்லிட்டு அவனும் போய்ட்டான்.
“அப்புறம் என்ன ஆச்சி?” நான்
“அவ்ளோதான். எல்லாரும் பஞ்சாயத்துல அபராதம் கட்டிட்டு போய்ட்டாங்க. டிரைவர் ஏற்கனவே ஆயாக்கு பணம் தந்திருந்ததால அவகிட்ட வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான்”
"ஆயாவ யாருமே சேத்துக்கலையா?" நான்
"ஆமாம். தலைவர்தான் ஆயாவுக்கு கடைசி வரைக்கும் ஆதரவு தந்தாரு. அவரு தயவுலதான் ஆயா இந்த ஊர்ல தைரியமா வாழ்ந்துகிட்டு இருந்திச்சி" ஜீவா
"அப்போ அந்த டீ கடை பாய்லர் " நான்
அது அப்பவே கொஞ்சம் கொஞ்சமா சின்னதாயி ஒரு நாள் பழைய வடை கடையாவே ஆயிடிச்சி. ஆயா வீட்டையும் வித்திடிச்சி. இப்போ அந்த கூரைதான் ஆயாவுக்கு எல்லாம். தலைவரும் போன மாசம் செத்துபோய்ட்டாரு"
“என்ன கதைடா இது. ஆயா கூட யார் யார் இருந்தாங்கன்னே தெரியலையேடா. ஒரே கொழப்பமா இருக்கே. ஆயா லிஸ்ட்ல இவ்ளோ பேரா. ஊரெல்லாம் சின்னவீடு வச்சிருந்தவங்கள பத்தி கேள்விபட்டிருக்கேன். இந்த ஆயா ஊரையே சின்னவீடா வச்சிருந்திருக்கே. இப்ப என்னதான் பிரச்சனை?" நான்
“ஆயாவுக்கு கொல்லி போடறது யாரு?” ஜீவா
“அதான் ஒரு ஊரே இருக்கே. யாரையாவது கொல்லி வைக்க சொல்லுங்க. இல்ல சீட்டெழுதி குலுக்கி போட்டு கண்டுபிடிங்க. இது ஒரு பெரிய பிரச்சனையா?” நான்
“அதுதான் பிரச்சனையே. அந்த லிஸ்ட் இன்னும் பெருசு. ஆயாவுக்கு கொல்லி போட்டா உண்மை வெளிய தெரிஞ்சிடும்னு யாரும் வரமாட்டாங்க. சோ, நிலால வடை சுடர ஆயாக்கு என்ன நிலைமையோ அதே நெலைமதான் இந்த ஆயாக்கும்” ஜீவா
நானும் எவ்ளோ கள்ளகாதல பத்தி கேட்டிருக்கேன். இது கொஞ்சம் வித்தியாசமானது. இது மாதிரி நெறைய கதைய ஜீவா சொன்னான். சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தாங்கன்னு எப்டி என்னால கண்டுபிடிக்க முடியலையோ அதே மாதிரி ஆயாக்கு யாரு கொல்லி வச்சான்னும் என்னால கண்டுபிடிக்க முடியல.
ஊருக்கு திரும்பி வரும் வழியில் நான் அவனிடம் அதை கூறினேன்.
“நான் ஒரு 30 வருஷம் முன்னாடியே பொறந்திருக்கலாம்” நான்
“அதுக்கென்ன பண்ண முடியும்……… வடை போச்சே” ஜீவா
நாங்க ரெண்டு பேரும் பஸ்ஸ்டாண்டுல நிக்கும்போது................
“அதோ போதே அதுதான் அந்த ஆயாவோட பேத்தியாம். பாட்டி செத்தத கேள்வி பட்டு ஒரிசால இருந்து வந்திருக்காம். அடுத்த வாரம் அவங்க குடும்பமே இங்க வந்து போண்டா கடை போடபோராங்கலாம்” அப்டின்னு ரெண்டு பேரு பேசிட்டே போனாங்க
“மச்சி! உனக்கு அடுத்த கதை ரெடிடா” நான்
“என்ன கதைடா?” ஜீவா
“பேத்தி சுட்ட போண்டா”
No comments:
Post a Comment