Monday, March 28, 2011

MEERA - PART 1


மீரா(மணமகன்  தேவை) – PART 1

March 14, 2011  7.30pm

“Will you please leave me alone? Leave me alone? Get the **** out of here and never come in my life”பிரபா.

February 27, 2011 Sunday(சுபமுஹூர்ததினம்)9.40am

"எங்கடா இருக்க?" - அருண் 

"என்னடா ஆச்சு?...தூங்கிகிட்டு இருக்கேன்……ஏன்  காலங்காத்தால  போன்  பண்ணி  சாவடிக்கிற…?"(சென்னையில்  ஞாயிற்றுகிழமை  காலையில்  எந்த  bachelor ம்  11 மணிக்கு  முன்னர்  எழுந்திரிக்க  மாட்டான்  என்பது  நாம் அறிந்த ஒன்றே !)

"நீ கக்கூஸ் போலனாகூட  பரவால்ல!இன்னும்  20 mins   சோழிங்கநல்லூர்  நாடார்  கல்யாண  மண்டபத்துல  இருக்க!இட்ஸ்  வெரி  அர்ஜென்ட்  மச்சி! ........Please come quickly…….."   
எங்கள்  gang லியே  அவன்தான்  மிக பொறுமையானவன்  . அதை  பார்த்தே  அவனை  ஒரு   பெண்  விரும்பி  2 மாதத்திற்கு முன்னர்தான்  திருமணம்  ஆனது. அவனே  அவசரம்  என்று  சொன்னதும் , நான்  காலைகடன்களை  முடித்துவிட்டு  புறப்பட  தயாரானேன் (குளிக்கவில்லை)

"பிரபா! எங்க போறீங்க?” – இது அபார்ட்மென்ட் செக்யூரிட்டி ...

 'நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்ல் உள்ள எல்லோரும்  அவரை  கவனிக்கவேண்டும். இல்லையென்றால்  உங்கள்  bike இல்  சில  spare parts காணாமல்  போகும் , தங்களை  யாராவது  தேடிவந்தால்  நீங்கள்  transfer ஆகிபோய்விட்டீர்கள்     என்று  அறிவிக்கப்படும் ………….ஆபத்துகள்  இன்னும்  பல . இதில் கவலைக்கிடமான  விஷயம்  என்னவென்றால்  அவராக  முன்வந்து  எதுவும்  கேட்கமாட்டார்நீங்கள்தான்  இடம், பொருள் , ஏவல் பார்த்து செய்யவேண்டும். இன்று  அவரே  கேட்டவுடன்   எல்லாம்  தலைகீழாக நடப்பது போல் இருந்தது .'

"இல்ல அண்ணாச்சிபிரண்ட் போன் பண்ணான் அதான்……."

நான் பைக்  ஸ்டார்ட் செய்தபோது அதுவும் ஸ்டார்ட் ஆகவில்லை. கூடவே  பஞ்சர் வேறு….. அவன் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லவேண்டும் என்றால்  ஆட்டோவில்தான் போயாகவேண்டும்.

"சண்டே  சார், 70 ரூபா  ஆகும்  பரவால்லையா?” 

சரி போலாம் ”………. “உக்காருங்க  சார்”.

ஸ்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்கக்.

என் விரல் ஆட்டோ  கம்பியில்  மாட்டி  கிழிந்தது……oh it’s bleeding…….

நேற்றிரவுதான் எனது தாய்பிரபா! உனக்கு இந்த மாசத்திலிருந்து டைம் சரி  இல்லையாம்....... எங்கயாவது  போனா  பாத்து  போ! என்றாள். எனக்கு  இந்த astrology ல் நம்பிக்கை  இல்லை  என்றாலும்

வடக்குபட்டி ராமசாமி…..உஉஊ ஊஊ .

எனக்கும்  அருணுக்கும்  2002 ல்  கல்லூரியில்தான்  நட்பு  உதயமானது.  அவன்  எனக்கு  நிறைய  உதவிகள்  செய்திருக்கிறான்எனக்காக  உதவும்  விரல்விட்டு  எண்ணக்கூடிய  நண்பர்களில்  அவனும்  oruvan. நாங்கள்  இருவரும்   java programmer ஆக  வெவ்வேறு  software compஇல்  வேலை  செய்துகொண்டிருக்கிறோம் . எல்லா  bachelor களையும்    போல ..என்  வாழ்க்கையும்  (24*7*365) கிழ்க்கண்ட  5 க்குள்  அடங்கி விடும்
1.       Laptop
2.       Bike
3.       Monthly Outing(With Camera)
4.       English movie DVDs and Tamil movies@theatre
5.       Weekly Magazines

த்தா!…..அவன்  இன்னொரு  கையையும்  வெட்டுங்கடா  …நான்  இன்னும்  ஒன் ஹெர்    அங்க  வரேன் ….அன்னிக்கே  அவன்  ரெண்டு  கையையும்  வெட்டி  இருந்த  இன்னிக்கி  இவ்ளோ  வேல  இல்ல!”.

நான்  சுயநினைவிற்கு  வந்த  போது  ஆட்டோ  மண்டபத்தை  நெருங்கி  கொண்டிருந்தது. அப்போதுதான்  ஆடோகாரரின்  professional கை, கால்  எடுப்பது  என்றும், side business   ஆட்டோ ஓட்டுகிறார்  என்றும் தெரிந்தது .

நாடார்  கல்யாணமண்டபம்  10.15am(நல்ல நேரம் முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது)

கல்யாண  மண்டபத்தில்  தமிழக  இளைஞர்களின் தற்போதைய தேசியகீதமான  ‘எவண்டி  உன்ன  பெத்தான் , அவன் கைல கெடைச்சா செத்தான்ஒலித்துகொண்டிருண்டது. கல்யாண மண்டபத்தில் என்ன  மயி*** டா  இந்த  பாட்டு என்று  நீங்கள்   கேட்டால்  தமிழக  தேசியகீதத்தை  பற்றி  அவதூறாக  பேசிய  குற்றத்திற்காக  உங்கள்மீது  கல்  எறியப்படும் , கொடும்பாவி எரிக்கப்படும், தங்களை தூக்கில் போடச்சொல்லி அனுஷ்கா  ரசிகர்மன்ற உறுப்பினர்களால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும். அதனால் என்னைப்போல் அமைதியாக இருந்துவிடவும்.

அருணும், அவன் மனைவி சந்தியாவும் என்னை  எதிர்பார்த்து  மண்டபத்தின்  வாசலில்  நின்றிருந்தார்கள்.
நாட்! ஏன்டா லேட்டு
"சாரி  மச்சி, லேட் ஆயிட்டு."

இப்படி  பேசுவது எனக்கு  5 வயதில் இருந்து ஆரம்பமானது. குறிப்பாக பள்ளி  மற்றும்  கல்லூரியில்  
ஏன்டா  லேட்?
"சாரி சார், லேட் ஆயிச்சி."

இது எனக்கு மட்டுமல்ல. நம்மில்  பலபேர்  பலநாட்களாக இப்படித்தான்  பேசிக்கொண்டிருக்கிறோம். எனக்கு  ‘நாட்என்று இன்னொரு பேரும்  உண்டு. கல்லூரியில் நண்பர்களின்  பிரச்சனைகளுக்கு  உடனடி தீர்வு கண்டதால் சொம்பும், ஆலமரமும்  இல்லாமலே ‘நாட்டாமைஆனேன். அதை ‘நாட்என்று நண்பர்கள் என் வேண்டுகோளுக்கிணங்க மாற்றிவைத்தார்கள்
 
ஏன்டா என்ன வரசொன்ன?”

கக்கூஸ் போனியா?”

அவன் மனைவி சிரித்தேவிட்டால்……….

மசுரு! இத கேக்கதான் கூப்டியா?

Cool down! இன்னிக்கி உனக்கு கல்யாணம். நான் பொண்ணு வீட்டுக்கு வாக்கு குடுத்துட்டேன்நான் அதிர்ந்தேன்.
டேய்! நீ வாக்கு  கொடுத்ததுக்கு எல்லாம்  கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது!
பொண்ணு யாரு என்னன்னு தெரியாமவேற  ஆள பாரு
அதெல்லாம் ஒண்ணும் பாக்கவேண்டாம். மரியாதையா வந்து தாலி கட்டு. இல்லைனா! கழுத்துல கத்தி வச்சு தாலி கட்ட சொல்லுவேன்”.

என் நினைவில் பார்த்திபனும் வடிவேலுவும் வந்து போனார்கள்.

ஏன் பிரபா யோசிக்கிறீங்க? மீரா என் ப்ரண்ட்தான். ரொம்ப நல்ல பொண்ணு. உங்கள நல்லா பாத்துப்பா. ப்ளீஸ் ஓகே சொல்லுங்க

எனக்கு அவர்கள் இருவரும் கையில் 'மஞ்சப்பைஇல்லாத தரகர்களாக தெரிந்தார்கள்.

இவன்கிட்ட என்ன கெஞ்சிகிட்டு இருக்க….டைம் இல்ல சீக்கிரம் வாடாஎன என் கையை பிடித்து இழுத்தான்

அட்லீஸ்ட் போட்டோவாது  காட்டுடா?” என் மனு தள்ளுபடி ஆனது கூட தெரிவிக்கபடாமல் மண்டபத்தினுள்  இழுத்துசெல்லப்பட்டேன்   .

அதுதான் பொண்ணோட போட்டோசந்தியா காட்டிய போஸ்டரில் மணப்பெண்ணின் பாதி முகத்தை ஆடு தின்றுவிட்டிருந்தது.

பிரபா வந்தாச்சு. யாராவது வேஷ்டிசட்டை இருந்தா எடுத்துட்டுவாங்க?” அருண்.

மாப்ள வேஷ்டிசட்டயோடதான் ஓடிபோனாரு. ஸ்டாக் எதுவும் இல்லயாரோ ஒருவர் கூட்டத்தில் இருந்து பதில் தெரிவித்தார்.

எல்லா கல்யாணமண்டபம் மற்றும் சுபநிகஷ்ச்சிகளில் நீங்கள் இதுபோல் ஒருவரை  பார்க்கலாம். அவர் மணமகன்/மணப்பெண்  யாருக்கும்  நெருங்கியவராக இருக்கமாட்டார். ஆனால்அவர்தான்  அந்த  கல்யாணத்தை  தான்  சொந்த செலவில் செய்பவர் போல அலப்பறை செய்துகொண்டிருப்பார்.

சரி பரவால்ல. நீ ஜீன்ஸ் பேன்டோடயே  தாலிகட்டுஅருண். “டேய், நான் இன்னும் கட்டிகிறேன்னு சொல்லவேல்ல”. “கட்டமாட்டேன்னு வேற சொல்லிவியா நீ?” ன் நண்பன் என்னை பயமுறுத்தினான்.

சரிடா அட்லீஸ்ட் பொண்ணுகிட்டயாவது சம்மதம் கேட்டீங்களா?”

நீ இப்போ அர வாங்கபோற. இன்னும் 10 நிமிஷத்துக்கு நீ வாயே திறக்ககூடாது.”

நம் சமுதாயத்தில் எத்தனை காலம் ஆனாலும் இது மாறாத ஒன்று. It’s a male domination world. ஒரு கல்யாணத்தின் போது மணமகனிடம்/மணமகனால் வைக்கப்படும் கோரிக்கைகள் பல. அவற்றுள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1.       படித்த
2.       அழகான
3.       மெலிதான  உடலமைப்பு  கொண்ட
4.       குடும்பப்பாங்கான(Family girl ah venumaam)
5.       பெரியவர்களை அனுசரித்து செல்லக்கூடிய  
6.       முடி நீளமாக உள்ள(அத வச்சி என்னங்கடா பண்ணப்போறீங்க?)
7.       விட்டுகொடுக்கும் மனப்பான்மை கொண்ட
8.       வரதட்சணை அதிகமாக குடுக்கக்கூடிய   
9.       சமையல் தெரிந்த
10.    துணி துவைக்க தெரிந்த……..goes on.

இவர்கள் கேட்கும் அனைத்தும் ஒரு பெண்ணிடம் இருக்கவேண்டும் என்றால் நீங்கள் பிரம்மனிடம் order கொடுத்துதான் செய்யவேண்டும். அப்படியே கிடைத்தாலும் கோரிக்கைகள் வைத்தவர் எப்படி இருப்பார் என்றாள்
1.       அரை மண்டையில் முடி இல்லாத
2.       முன்வயிறு நீண்ட….goes on
இவர்கள் இப்படியென்றால் பெண்ணின் பெற்றோர்கள் கேட்பது choice  இல்லாத yes or no கேள்வி மட்டுமே.
"பிடிச்சிருக்கா?" 
 ஏனோ, பெண்ணிடம் உனக்கு எந்தமாதிரி மாப்ள வேண்டும் என்று எந்த பெற்றோரும் கேட்டதாக இதுவரை எனக்கு தெரியவில்லை. பல பெற்றோர்கள் தங்கள் மகளை எங்கயாவது தள்ளிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். தைரியசாலி பெண்கள் வேண்டுமானால் தனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை வேண்டும் என கேட்கலாம்.  
நல்ல நேரம் முடியபோது. மாப்ளய அழைச்சுண்டு வாங்கோ!” அய்யர் என் கவனத்தை கலைத்தார்

 மண்டபத்தின் மையபகுதியான சிறிய கட்டத்தின் நடுவே அருண் மற்றும் சந்தியாவால் நான் நிறுத்தப்பட்டேன்.
பொண்ணயும் அழச்சுண்டு வாங்கோ!” அய்யர் 

லக்ஷ்மி! மீராவ கூட்டிகிட்டு வாம்மாஒரு பெரியவர். அவர் பெயர் கந்தசாமி(பெண்ணின் தந்தை), லக்ஷ்மி அவர் மனைவி(பெண்ணின் தாயார்) என்றும் மீரா கல்யாணப்பெண் என்றும் சந்தியா என் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தாள் .
வெகுநேரமாகியும் மீரா வரவில்லை.

அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு நினைக்கிறேன். என்ன விட்ரா”. நான் பாக்கறேன் என்று சந்தியா மணப்பெண் அறைக்கு ஓடினாள்.

சிறிது நேரத்தில் ஒரு பெண் தலையை குனிந்துகொண்டே வந்து என் எதிரில் நின்றாள்,
அருகில் சந்தியா. நான் பெண்ணின் முகத்தை பார்க்க முயற்சி செய்தேன். முடியல!

நல்ல நேரம் முடிய இன்னும் ஒரு நிமிஷந்தான் இருக்கு சீக்கிரம் தாலி கட்டுங்கோ!” அய்யர்.

என்னடா யோசிக்கிற? கட்றா!” அருண்.

என்ன நடக்கிறது என்று தெரியாமலே நான் அந்த பெண்ணுக்கு தாலி கட்டினேன். நான் மூன்றாவது முடிச்சு போடும்போது ராகு காலம்(எனக்கு) தொடங்கிவிட்டிருந்தது. அடுத்த நொடி…….





1 comment:

  1. ungalukku ivvalavu thiramaya... ithana naala sollave illa :) :)

    ReplyDelete

Powered by Blogger.

Followers

About Me