கலைவாணி (பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்)
ஒரு இளவேனிற் காலம் - 2009 காலை 9.20am
அது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பல் மருத்துவமனை. நான் அன்று காலைதான் வட இந்தியாவில் இருந்து வந்திருந்தேன். அரை மனதோடு அந்த மருத்துவமனையின் ‘பொதுப்பிரிவில்’ அமர்ந்திருந்தேன். காரணம்? ரணம்.
“Token no 45!!!"
“சாவு கிராக்கி! வூட்ல சொல்ட்டு வண்ட்டியா?"- வரும் வழியில் ஆட்டோ காரரிடமிருந்து வசவு வார்த்தைகள். நிமிடத்திற்கு 100 முறை அந்த வார்த்தை என் காதுகளில் ஒலித்துகொண்டிருந்தது.
“Token no 45!!!”
"சார்! உங்களதான் கூப்பிடறாங்க" அருகில் இருந்தவர் உசுப்பியதால் நான் அடுத்த வார்டுக்கு சென்றேன்(அவரின் Token no 46 ஆக இருக்குமோ!).
“Token No 45! Counter No 2!”
9.25am
"உங்க கார்டு குடுங்க ப்ளீஸ்" .
அந்த பெண்மணி பார்ப்பதற்கு 'தலையணைக்கு உறை போட்டது போல' இருந்தாள். அவளின் உடலில் எந்த பகுதியும் அசையவில்லை எனினும் என் கார்டில் எதோ கிறுக்கினாள் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்.
அந்த பெண்மணி பார்ப்பதற்கு 'தலையணைக்கு உறை போட்டது போல' இருந்தாள். அவளின் உடலில் எந்த பகுதியும் அசையவில்லை எனினும் என் கார்டில் எதோ கிறுக்கினாள் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்.
‘First floor, Room no 32’க்கு போங்க…
இடைப்பட்ட நேரத்தில் என்னைப்பற்றி கொஞ்சம்…………
நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இயந்திரவியல் பொறியாளராக ஓய்வெடுத்து..............மன்னிக்கவும்…… பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். தற்போது இந்த மருத்துவமனைக்கு பல் சுத்தம் செய்துகொள்வதற்காக வந்துள்ளேன்.
Room no 31.
ஒரு பயிற்சிபெற்ற மாணவன் நோயாளியின் வாய்க்குள் புதையல் இருப்பதாக நினைத்து பார்த்து பார்த்து 'பராண்டி' கொண்டிருந்தான். என் கார்டில் கலைவாணி என்று இருந்ததால் கொஞ்சம் தைரியம் வந்தது(ஐ! லேடீஸ்! லேடீஸ்!).
ஒரு பயிற்சிபெற்ற மாணவன் நோயாளியின் வாய்க்குள் புதையல் இருப்பதாக நினைத்து பார்த்து பார்த்து 'பராண்டி' கொண்டிருந்தான். என் கார்டில் கலைவாணி என்று இருந்ததால் கொஞ்சம் தைரியம் வந்தது(ஐ! லேடீஸ்! லேடீஸ்!).
Room no 32ல் இருந்து கொல்லங்குடி கருப்பாயியின் கொள்ளுபேத்தி போல ஒரு பெண் என்னை நோக்கி நடந்து வந்தாள்.
"அய்யோ... நான் இல்ல.. நான் இல்ல" என்று நான் பின்வாங்க, என் அட்டையை வாங்கி பார்த்துவிட்டு உள்ள போங்க என்றாள்.
நான் உள்ளே நுழைகையில் மஞ்சள் நிற தேவதை ஒன்று வெள்ளை நிற ஆடை அணிந்து என்னை வரவேற்றது.
Room No 32 9.30am
“Lie down over this machine. I will be back in two mins” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
அவள் பெயர் கலைவாணியாக இருந்தாலும் பார்ப்பதற்கு லக்ஷ்மி கடாக்ஷ்மாக இருந்தாள் ('லக்ஷ்மி கடாக்ஷம்' ன்னா என்னப்பா?). ஆனால், அவள் ஒரு 'முப்பெருந்தேவியரின் முக்கூடல்' என்பது எனக்கு பின்னால்தான் தெரியவந்தது. கண், உதடு, இடுப்பு என தனித்தனியாக வர்ணிப்பதற்கு 2 நிமிடம் போதாது என்பதால், சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
அவள் ஒரு சூப்பர் பிகர்!!!!!!
அவள் பெயர் கலைவாணியாக இருந்தாலும் பார்ப்பதற்கு லக்ஷ்மி கடாக்ஷ்மாக இருந்தாள் ('லக்ஷ்மி கடாக்ஷம்' ன்னா என்னப்பா?). ஆனால், அவள் ஒரு 'முப்பெருந்தேவியரின் முக்கூடல்' என்பது எனக்கு பின்னால்தான் தெரியவந்தது. கண், உதடு, இடுப்பு என தனித்தனியாக வர்ணிப்பதற்கு 2 நிமிடம் போதாது என்பதால், சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
அவள் ஒரு சூப்பர் பிகர்!!!!!!
அவள் வருகை பதிவேடு முதல் மதிப்பெண் பட்டியல் வரை 98% ஆகவே இருந்தது. ஆனால் நானோ, கல்லூரியில் 17 பாடங்களில் அரியர் வாங்கிய ஒரு அறிவு ஜீவி. ஒரு லோட் ஃபேர் & லவ்லி உபயோகித்தாலும் கூட அவளின் நிறத்தை அடையமுடியாத நான் 'அந்த மஞ்சக்காட்டு மைனா' வை மடக்கிவிட வேண்டுமென்று உறுதியாய் இருந்தேன்.
9.32am கலைவாணியும் கேஸ் ஸ்டடியும்
“நான் சொல்லவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை.”
"உங்க பேர் என்ன?" கலைவாணி
('கலைவாணி'தாசன் என்று சொல்ல ஆசையாக இருந்தாலும்)
கண்ணதாசன் .
கண்ணதாசன் .
“வயசு?” கலைவாணி
வழக்கமாக பெண்கள்தான் நடப்பதை சொல்லலாமா? முடிந்த வயதை சொல்லலாமா? என்று யோசித்து முடிந்த வயதைவிட 1 அல்லது 2 வயதை குறைத்து சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்று நான் யோசிக்கையில்......
“உங்க வயசதான் கேட்டேன்? ஏதோ சொத்த கேட்டா மாதிரி யோசிக்கிறீங்க” கலைவாணி
25 (அவள் கோபமாக கேட்டபொழுதுகூட அழகாகத்தான் இருந்தாள்.)
மீண்டும் ஆட்டோகாரர் என் காதுகளில்......
“சாவு கிராக்கி! வூட்ல சொல்ட்டு வண்ட்டியா?” ஆஹா!! சென்னை பாஷையில் என்ன அழகான ஒரு கவிதை.
“சாவு கிராக்கி! வூட்ல சொல்ட்டு வண்ட்டியா?” ஆஹா!! சென்னை பாஷையில் என்ன அழகான ஒரு கவிதை.
“எந்த காலேஜ்ல படிக்கிறீங்க?” இந்த அவமானத்தை நான் பல இடங்களில் சந்தித்து இருந்தாலும் இன்று எனக்கு அது புது விதமாக இருந்தது.
சாரி. ஐ அம் வொர்கிங் இன் எம்.என்.சி (இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல.....)
ஓ! கம்பெனி பேர் என்ன?” கலைவாணி
********* I Ltd
"வாட் இஸ் யூவர் டேக் ஹோம் சாலரி?” கலைவாணி
“பல்லு கிளீன் பண்ண வந்தா இதெல்லாம் கேப்பீங்களா ?”
“இது கேஸ் ஸ்டடி. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?” கலைவாணி
"25 ,600 பர்/மந்த்
"சாக்லேட் நெறைய சாப்பிடுவீங்களா?" கலைவாணி
“இல்ல!”
“சின்ன வயசுல?” கலைவாணி
“சின்ன வயசுல எனக்கு சாக்லேட்க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது"
"அதன் பிறகு சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரி யார் வைத்திருந்தார்?" என்பதைத்தவிர என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
கடைசி கேள்வி
“உங்க ஃபோன் நம்பர் என்ன?” - கலைவாணி
"98253 54321. ஃபேன்சி நம்பர்"(அவள் என்னை பார்த்து முறைக்க! ஒரு வழியாக கேஸ் ஸ்டடி முடிந்தது).
“உங்க நம்பர்?” இது நான்
சைஸ் 8”(கண்ணா! ‘பல்பு’ வாங்க ஆசையா?)
பிறகு என் வாய்க்குள் ஒரு சிறிய கண்ணாடியால் ஆன டூல் வைத்து எதையோ தேடினாள் .
“நீங்க கருப்பா இருந்தாலும் ஸ்மார்ட்டாதான் இருக்கீங்க”. கலைவாணி
இதை அவள் சொல்லியபோது 100 தேவதைகளுடன் சொர்க்கத்திற்கு பறந்து கொண்டிருந்தேன். போகிற வழியில்.....
"ஆனா, உங்க வாய்லதான் கொஞ்சம் பேட் ஸ்மெல் வருது. “நீங்க சரியா பல் வெளக்க மாட்டீங்களா?” கலைவாணி
(ஐயோ!...என்ன இது? எல்லா தேவதைகளும் பாதையை மாற்றி நரகத்தில் உள்ள எண்ணெய் சட்டியில் போட்டு என்னை வறுத்தார்கள்).
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…..?" கலைவாணி
“இந்த கேள்வி கேட்டதுக்கு பதில நீங்க என்ன நாலு கெட்டவார்த்தை சொல்லி திட்டி இருக்கலாம்” நான்
“கிளீன் பண்ணா சரியாயிடும். ஆனா, நான் உண்மையதான சொன்னேன்”(கண்ணா! 2 வது ‘பல்பு’ வாங்க ஆசையா?)
ஏனோ, அதன் பிறகு நான் அவளிடம் பேசவில்லை. பேசவும் தோன்றவில்லை.
இரண்டே மணி நேரத்தில் என் பற்களை நன்றாக சுத்தம் செய்துவிட்டாள்(ஒரு தாயை போல).
டின்….டுன்…டுக்…
"என்ன ஆச்சு?" நான்
"ஒன்னும் இல்ல. முடிஞ்சிடிச்சி" (ச்சே ! ரொம்ப சின்ன வாயா போச்சே!!!!!)
"Brush your teeth daily min. for five mins" கலைவாணி
"என்னங்க! அட்வைசா?" நான்
"நான் டுட்டில கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். பரவால்ல, ஆல் தி பெஸ்ட்" கலைவாணி
"நான் என்ன அரியர் எக்ஸாமா எழுத போறேன்" நான்
"நல்ல காமெடியாதான் பேசறீங்க" என்று சிரித்தாள்
ஹாஸ்பிடல்லயும் சுடுகாட்லயும் சொல்லிட்டு போகக்கூடாது என்பதால் நான் அவளிடம் சொல்லாமலே கிளம்பினேன்.
"கண்ணதாசன்னு பேர் வச்சிருக்கீங்க. ஒரு கவிதை சொல்லிட்டு போங்களேன்". அவள் என்னை கலாய்த்தாள்.
நான் மனதை தேற்றிக்கொண்டு......
"கலைவாணி" என்று உரைக்க
"செருப்பு பிஞ்சிரும், இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்த மவனே நீ செத்த" யாரோ ஒருவர் கைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார். (யார் பேசினாலும் எனக்காவே பேசற மாதிரியே இருக்கே)..
நான் அவள் பதிலை எதிர்பார்த்து அவளின் முகத்தை நோக்கினேன்.
அவள் கையில் செருப்பும், கண்களில் நெருப்புமாக 'பத்ரகாளி' போல் காட்சியளித்தாள்.
அந்த நிமிடம் சிவபெருமானும் பார்வதியும் கே. பி. சுந்தராம்பாளின் 'தகதகவென ஆட வா' பாடலுக்கு என்னை குப்புற போட்டு மிதித்து ஆடிக்கொண்டிருப்பது போல இருந்ததால் அவளிடம் சொல்லாமலே அங்கிருந்து வெளியேறினேன்.
"டேய்! கொயால! பாத்து போடா! வீட்டுக்கு போறதுக்குள்ள பாடி ஆய்டாத". மற்றுமொரு ஆட்டோகாரர். சென்னை ஆட்டோகாரர்களின் அகராதியில் நல்ல வார்த்தைகளே இல்லை போலும்.
அந்த நிமிடம் சிவபெருமானும் பார்வதியும் கே. பி. சுந்தராம்பாளின் 'தகதகவென ஆட வா' பாடலுக்கு என்னை குப்புற போட்டு மிதித்து ஆடிக்கொண்டிருப்பது போல இருந்ததால் அவளிடம் சொல்லாமலே அங்கிருந்து வெளியேறினேன்.
"டேய்! கொயால! பாத்து போடா! வீட்டுக்கு போறதுக்குள்ள பாடி ஆய்டாத". மற்றுமொரு ஆட்டோகாரர். சென்னை ஆட்டோகாரர்களின் அகராதியில் நல்ல வார்த்தைகளே இல்லை போலும்.
மாலை 4.30pm
குளித்துவிட்டு கண்ணாடியை பார்த்த போதுதான் அது தெரிந்தது. ஆம், என் தெத்துபல் சிறிதாக உடைந்திருந்தது.
டின்….டுன்…டுக்…
கண்ணாடியில் மீண்டும் அவள். கையில் செருப்பும்.......
இது வேலைக்காவது என்பதால் ஒரு பழைய(காதல் தோல்வி சம்பந்தப்பட்ட) படத்தை பத்து நிமிடம் பார்த்துவிட்டு உறங்கிப்போனேன்.
இரவு 9.59pm
என் மனம் லாரியின் இரு சக்கரத்திற்கு நடுவே சிக்கிகொண்ட எலியை போல நசுங்கிப்போய் இருந்தது.
"மச்சி! நல்லா பாத்தியா அவ செருப்பு சைஸ் 8" தான” நண்பன் என்னை வெறுப்பேற்றினான். நான் அவனை முறைத்தேன்.
“அது இல்லடா. செருப்பு வாங்கிகொடுக்க வசதியா இருக்குமேன்னு கேட்டேன். பிரண்ட்ஸ்! நாளைக்கே போறோம்! அண்ணிய பாக்கறோம்! ஆளுக்கொரு ஜோடி செருப்பு கொடுக்கறோம்”.
"ஏண்டா, அவ என்ன அடிக்காம விட்டுடாலேன்னு வருத்தமா இருக்கா?" நான்.
என் நண்பர்கள் ‘laughing therapy association members’ போல சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
10.00pm
Excuse me boss. You have a text message.
"உங்க பல்லு உடைஞ்சிருக்கா?" கலைவாணி. ரொம்ப முக்கியம்......நான் பதில் அனுப்பவில்லை.
Excuse me boss. You have a text, text..........…..text (5) message
“Reply” - கலைவாணி
ஆமாம், அதுக்கென்ன இப்போ?
Excuse me boss. You have a text message.
உடைஞ்சது உங்க பல்லு மட்டுமில்ல……………………………… என் மனசுந்தான்.............
(கண்ணா!!!! ‘லட்டு’ திங்க ஆசையா????????).
உடைஞ்சது உங்க பல்லு மட்டுமில்ல……………………………… என் மனசுந்தான்.............
(கண்ணா!!!! ‘லட்டு’ திங்க ஆசையா????????).
முற்றும்.
:) good one to start with..
ReplyDeleteVery nice. Suuuuuper
ReplyDeleteodanjathu unga pallu mattum illa...en manasunthaan..
ReplyDeletesema kalakkal..
:)
una madiriye irruku...
ReplyDeleteactualy i wan to know who is written this.
any way it nice.
Sathyama naan ezhudhina storydhaan machi... :)
ReplyDeletenalla iruku machi..keep going
ReplyDelete