Tuesday, March 29, 2011

MEERA - PART 2


அடுத்த நொடி………..

மீரா  ‘வென அழுதுகொண்டே மணப்பெண் அறைக்குள் ஓடினாள். சந்தியாவும்  உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள். அனைவரும்  அலறி அடித்துக்கொண்டு மணப்பெண் அறையை நோக்கி ஓடினார்கள்கல்யாண வீடாக இருந்தது ஒரே நிமிடத்தில் சாவு வீடு போல் காட்சியளித்தது.

கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்-நெப்போலியன்

நான் இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல், இனி என்ன நடக்கப்போகிறது  என்றும் தெரியாமல் ஒரே நேரத்தில் மாப்பிள்ளையாகவும், பிணமாகவும் இருப்பதைப்போல உணர்ந்தேன். சிறிது நேரத்தில் சந்தியா மட்டும் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்

மீராவ கொஞ்ச நேரம் தனியா விடுங்க!” சந்தியா.

நான் கூட்டத்தில் இருந்து தனியாகபிரிக்கப்பட்டேன். கூட்டம் மெதுவாக கலைந்து பந்திக்கு சென்றது. அதில் இருவர் “

பொண்ணுக்கு cancer ஆம்!, அதான் மாப்பிள ஓடிபோய்ட்டானாம்” 

அது இல்லையாம்! அந்த பொண்ணுக்கு கர்பப்பை எடுத்துட்டாங்களாம்!” இது மற்றுமொரு பெண்.

“Gossip is one of the harmful disease in the world

நமது சமுதாயத்தில் இது ஏற்படுத்தும் விளைவுகள் பல. இங்கே கல்யாணத்தன்று மாப்பிள்ளை ஓடிவிட்டால் அந்த பெண்ணிற்கு உடல்நிலை சரி இல்லை!, அதே பெண் ஓடிவிட்டால் அந்த பெண்ணே சரி இல்லை!.
யார் தவறு செய்தாலும் பழி அந்த பெண்ணையே சார்கிறது. புதிதாக கல்யாணமானவன் ‘drunk and driveசெய்து விபத்தில் சிக்கி செத்துவிட்டால், அந்த பெண்ணிற்கு ‘தரித்திரியம் பிடித்தவள்’(புருஷனையே முழுங்கிட்டா பாரு!) என்று பட்டம் கட்டப்படும். பிறகு அவளுக்கு யாரும் வாழ்க்கை குடுக்க மாட்டார்கள்அவள் தனியாக வாழ்ந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது.

 “அதெப்படி! கல்யாணமே பண்ணிக்காம ஒரு பொண்ணு தனியா இருக்கமுடியும்என்று அக்கம் பக்கத்தில் உள்ள ‘தர்மபத்தினிகள்அந்த பெண்ணுக்கு ‘விபச்சாரிஎன் பட்டமும் கட்டிவிடுவார்கள்.”

இவ்வளவு கலவரத்திற்கு மத்தியிலும் அங்கே நடப்பதை பற்றி கொஞ்சம் கூட  கவலைபடாமல் ஒரு  பெண் தன் மொபைலில்  பட படவென sms அனுப்பிக்கொண்டிருந்தாள்.

காதலர்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவர்களின் உலகம் வேறு. பொதுமக்கள்தாம் அவர்கள் தங்களை தொந்தரவு செய்வதாக நினைக்கிறார்கள்”- மதன்

அவள் ஜீன்ஸ்ம் டாப்ஸ்ம் அணிந்திருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் பொறுமையின் உச்சத்திற்கே சென்று “மரியாதையா இப்ப இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?”

நான் சொல்றேன் இங்க வாங்கMr. கந்தசாமி எங்களை அழைத்தார்.

மீராவுக்கு நிச்சயம் பண்ண பையன் இன்னிக்கி காலைல ஒரு பொண்ணோட  ஓடிபோயட்டான். விஷயம் வெளியதெரிஞ்சா அவமானம்னு நெனைச்சி பையன் வீட்டுக்காரங்க  சொல்லாம போய்ட்டாங்க. காலைல 8.30 மணிக்குதான் தரகர் போன் பண்ணி சொன்னார். 10.00 மணிக்கு முஹுர்த்தம். பொண்ணோட கல்யாணம் நின்னுபோனது தெரிஞ்சா சொந்தக்காரங்க ஒரு மாதிரியா பேசுவாங்க. அப்பதான் அருண் உங்கள பத்தி சொன்னார். அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும்
.
மாப்ளமீரா ரொம்ப நல்லா பொண்ணுஎன்ன! கொஞ்சம் அதிகமா கோவம் வரும் அவ்ளோதான். என் பொண்ண கைவிட்டுடாதீங்க!என்று தந்தைக்கே உரிய தோரணையில் பேசினார்.

நான் அவருக்கு ‘ஆமாம்என்றோ ‘இல்லைஎன்றோ பதில் சொல்லமுடியாமல் விழித்துக்கொண்டிருக்கையில்

ஆனந்தி! இங்க வா

What happened dad?” – ஆனந்தி

இவர்தான் அக்காவ கட்டிகிட்டவர். பேரு பிரபாகர்

“Hi Prabu. I m busy. I ll catch u later” என்று சொல்லிவிட்டு ஜீன்ஸ்ம் டாப்ஸ்ம் அணிந்த பெண் மொபைலில்மூழ்கினாள்.

இப்ப என்னடா பண்றது?”

எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்இப்ப அவங்ககூட பொண்ணு வீட்டுக்கு போ(Firstnight பொண்ணு வீட்லதான் வைக்கணுமாம்)

மீரா வீட்டு மாடி(14வது படிக்கட்டு) 8.30pm

அக்கா அந்த பையன ரொம்ப லவ் பண்ணா. அவன்தான் அக்காவ விட்டுட்டு இன்னொருத்தி கூட ஓடிப்போயட்டான்.

நிச்சயத்திற்கு  பிறகு பெண் தனது இதயத்தை ஆணிடம் முழுதாக தந்து விடுகிறாள். திருமணத்திற்கு பிறகு ஆணுக்கு கிடைப்பது பெண்ணின் உடல் மட்டுமே.

சரி! SMS அனுப்பிகிட்டே இருக்க. யாரு? லவ்வர் ?” நான்

Ya! It’s My boyfriendஆனந்தி.

பாத்து! அவனும் கல்யாணத்தன்னிக்கு ஓடிடபோறான்

அதெல்லாம்  போகமாட்டான். அப்படியே போனாலும் உங்களமாதிரி ஒரு இளிச்சவாயன் கிடைக்காமயா போய்டுவான்

விக்கிரமாதித்தன் தன் முயற்சியில் சிறிதும் சளைக்காமல்…………….

சரி! மீராக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன். எனக்கு கொஞ்சம் helpful இருக்கும்.

பொண்டாட்டிய pickup  பண்ண அவ தங்கச்சிகிட்டயே ஐடியா கேக்கறீங்க. வெட்கமா இல்ல! Talent  இல்லைனா வளத்துகோங்க!சொல்லிவிட்டு ஆனந்தி கீழே சென்றாள்.

There is a difference between superman and Spiderman. Superman is superman by birth. He has born with super power. But, Spiderman is not……… - kill bill vol.2

மீரா வீட்டு பெட்ரூம்(கதவுக்கு வெளியே) 9.05pm  

மாப்ள! நாளைக்கு நாங்க பொறுமையா மீராக்கு எடுத்து சொல்றோம். அவ எதாவது கோவமா பேசினா கண்டுக்காதீங்கலக்ஷ்மி

சரி! நான் பாத்துக்கறேன்

மீரா வீட்டு பெட்ரூம்(கதவுக்கு உள்ளே) 9.10pm

 நான் உள்ளே நுழைந்தவுடன் …..

நாயே! எவ்ளோ நேரம் உனக்காக வெயிட் பண்றது. சீக்கிரமா வரத்தெரியாதா?” மீரா என்னை ஓடிவந்து அணைத்துகொண்டாள்.

எதுக்கு?”

அத நான் அப்புறம் சொல்றேன். இப்ப…………..........”

11.30pm

நானும் மீராவும் கட்டிலில் அரை நிர்வாணமாய்

நீ படிச்சதுலேயே பிடிச்ச கவித ஒன்னு சொல்லேன்மீரா.

மூச்சு முட்டும் இரவில்
உன் முந்தானை வாசம்
என் சோம்பல் முறிக்கும் மருந்தாகும்.”

ச்சீசீ!”


ச்சீசீ எனும் வார்த்தை பெண்களுக்காகவே படைக்கப்பட்டது. அந்த வார்த்தையை ஒரு ஆண் உச்சரித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது – மதன்

அருண் Calling………

ஹாய் அருண்!”

என்னடா? மீராவோட என்ஜாய் பண்றியா?”

ஹ்ம்ம்! புது மாப்ள என்ன பண்றான்

அவன மணியும்(செக்யூரிட்டி), ரவியும்(ஆட்டோகாரர்) பத்திரமா பாத்துக்குறாங்க. ……..

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்”.....................................

அடுத்த வாரம் ஒரு பொண்ண கடத்தணும்அருண்.              


பி.கு: நாங்க நாலு பேர். எங்களுக்கு பயமே இல்ல.
அருண்
சந்தியா
மீரா
பிரபாகர்
உதவி
மணி & ரவி(எங்களுக்கும் பயமே இல்ல)
  




2 comments:

  1. :)
    paavam daa andha maapillai... :)
    unna endha alavukku nallavannu nenachano andha alavukku kettavanaa irukkiyae... :P

    ReplyDelete
  2. Jus I wrote machi....kadha endha alavukku nalla irukunnu enaku theriala...

    ReplyDelete

Powered by Blogger.

Followers

About Me