Feb 14 2011, 05.00 am
“Mr. raam. Give me the pistol…..don’t shoot….. Don’t shoot…..” இன்ஸ்பெக்டர் மனோகர்
டுமீல்!!!!!!!!!!!!!!!!!!!!
Story by Raam / Raam’s Story
Feb 13 2011, 07.00am
வண்டி எண் 12673 சென்னைலியிருந்து வரும் சேரன் எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்துகொண்டிருக்கிறது.
நான் சத்யாவ ஒரு ஆறு மாசமா லவ் பண்றேன். ஆனா இன்னும் சொல்லல. சத்யா நான் தங்கியிருக்க வீட்ல மொத மாடில அவங்க அப்பா அம்மாவோட தங்கியிருக்கா. இன்னிக்கி எப்படியாச்சும் சொல்லனும். சிம்பு சொல்றமாதிரி எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ணமாட்டோமா…….
“ஹாய் ராம்! ஸாரிப்பா. ட்ரெயின் லேட். ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா?” சத்யா.
“சௌதெர்ன் ரயில்வே என்னைக்கி கரெக்ட் டைமுக்கு வந்திருக்கு. இப்பதான் நானும் வந்தேன்” நான்
“பொய் சொல்லாத! எனக்கு தெரியும். நீ காலைலேயே வந்து பொண்ணுங்கள சைட்தான அடிச்சிட்டிருந்த” சத்யா
“அத விடு. உங்க அப்பா அம்மால்லாம் எப்ப வராங்க?” நான்
“நாளைக்கு காலைல. எனக்கு இன்னைக்கி ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதான் வந்துட்டேன். வீட்ல அம்மா நல்லா இருக்காங்களா?” சத்யா
“நல்லா இருக்காங்க. போலாமா?” நான்
“போகலாம். அதுக்கு முன்னாடி இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு சொல்லு” சத்யா
“ஹே சூப்பரா இருக்கு. ஆனா உனக்கு நல்லா இல்ல” நான்
“போடா பன்னி” சத்யா
“சரி! என்கிட்டே ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே. அது என்ன?” சத்யா
“ஒன்னும் இல்ல! கொஞ்சம் அமைதியா வாயேன்” ராம்.
“நீ என்ன சொல்லப்போறன்னு எனக்கு தெரியும்” சத்யா
“தெரியுமில்ல. அப்புறம் ஏன் கேக்குற?”
Feb 13 2011 10.30am
“As a architect, you should not come late. What you are thinking about me? I am not sitting here to welcome you. You are a…………………………………..” மோகன்
“ஸாரி சார்! சத்யா ஊர்லேர்ந்து வந்தா. அவள ட்ராப் பண்ணிட்டு வர லேட் ஆயிட்டு” நான்
“சத்யாவா! உன் லவ்வ சொல்லிட்டியா? என்ன ரிப்ளே?” மோகன்
“இன்னும் இல்ல சார். ஈவனிங் தான் சொல்லனும்” நான்
“நீ வேஸ்ட். காதல் வந்து வாந்தி மாதிரி. வந்தா உடனே எடுத்துடனும்......இப்படிதான் நானும் அகிலாவும் காபி ஷாப்ல......................................”
“என்ன? வாந்தி எடுத்தீங்களா?.......சார்…………. இத இன்னையோட 42 வது தடவ சொல்றீங்க”
“பரவால்ல! இன்னொரு முறை கேளு. அதுக்கும் சேத்துதான சம்பளம் வாங்கற.
நானும் அகிலாவும் காபி ஷாப்ல………….” மோகன்
“என்னால முடியாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்……”
“டென்ஷன் ஆகாதடா. சரி! இன்னைக்கி கண்டிப்பா சொல்லிடு. சொல்லும்போது மறக்காம அந்த கிப்ட். முடிஞ்சா ஒரு கிஸ்ஸும்” மோகன்
“ஒரு பாஸ் மாதிரியா பேசுறீங்க” நான்
“இதுல எல்லாரும் ஒண்ணுதான், அப்புறம் அந்த லைப்லைன் ப்ரொஜெக்ட கொஞ்சம் முடிச்சிடு. Its very urgent. இப்படிதான் நானும் அகிலாவும்…………………………………………..” மோகன்
Feb 13 2011 10.00pm
“சத்யா எங்க?” வீட்டு ஓனர்.
“நான் பாக்கலையே. நானே ஆபிசிலேர்ந்து இப்பதான் வரேன். நீங்க யாருக்கு வெயிட் பண்றீங்க” நான்
“சத்யாவுக்குதான். சீக்கிரம் வரேன்னு சொன்னா. மணி பத்தாகுது. இன்னும் காணோம்.
நீ கொஞ்சம் போய் பாத்துட்டு வரியா?”
“சரிம்மா. கண்டிப்பா” நான் அவள் அலைபேசிக்கு அழைத்தபோது அலைபேசி அனைத்துவைக்கப்பட்டிருந்தது. என் பைக் அவள் கம்பெனி(ஆர். கே. புரம் 2nd கிராஸ்) நோக்கி விரைந்தது.
“ஹே நில்லு. இந்தபக்கம் எங்க போற” இன்ஸ்பெக்டர்
“என் ப்ரண்ட்ஐ ஆபிசிலேர்ந்து பிக்கப் பண்ணனும். அதான் சார்” நான்
“இந்த பக்கம் போககூடாது. சுத்தி போ” இன்ஸ்பெக்டர்
நான் அவள் ஆபிசை அடைந்த போது அவள் மாடியில் யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
Feb 13 2011, 10.30pm
“சொல்லலைனா……………………………………..……..” நான்
Story by Ravi/Ravi’s story
Feb 13 2011 11.00 am
என் பேரு ரவி. போன ஒரு வாரமா நான் தூங்கல. என் தங்கச்சிய ஒருத்தன் ஏமாத்திட்டான். அவனதான் இந்த ஒரு வாரமா தேடிட்டு இருக்கேன்.
“நான் கேட்டது என்னாச்சு?” நான்
“கொண்டு வந்திருக்கேன்டா. எங்க மாமாகிட்ட இருந்துச்சி. அதான் எடுத்துட்டு வந்துட்டேன். இத வச்சிக்கோ. ஒரு நல்ல நேரமா பாத்து அவன் கதைய முடிப்போம்” கார்த்திக்
“யாருடா அவன்?”
“நீ கேட்டா மாதிரி ப்ரண்ட்ஸ் கிட்ட எல்லாம் விசாரிச்சேன். அவன் இப்ப சத்யான்ற பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கானாம். நானும் அவன பாத்திருக்கேன். அவன் பேர் கூட………” கார்த்திக்
“வேண்டாம் மச்சி! பேரெல்லாம் எனக்கு தெரிய வேணாம். நீ ஆள மட்டும் காட்டு. போதும்” நான்
Feb 13 2011, 10.00pm
“ரவி! உடனே கெளம்பி ஆர். கே. புரம் 2nd கிராஸ்க்கு வா. அவன் அங்கதான் போய்கிட்டிருக்கான்” கார்த்திக்.
கார்த்திக் போனில் தெரிவித்த இடத்திற்கு நான் உடனடியாக விரைந்தேன்.
Feb 13 2011 10.30 pm
நான் அந்த இடத்தை அடைந்தபோது ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“அந்த பொண்ணு பேருதான் சத்யாவா?” நான்
“ஆமாண்டா”
“சரி நம்ம யார கொல்லனும்?” நான்
Story by Sathya/Sathya’s story
Feb 13 2011, 10.30 pm
என் பேரு சத்யா. நான் ஒரு கம்பெனில HR எக்சிகியுடிவா வொர்க் பண்றேன். எனக்கு ராம போன ஆறு மாசம்தான் தெரியும். கொஞ்ச நாளாவே என் மனசு என்கிட்டே இல்ல. என் சுகம் துக்கம் எல்லாமே இப்போ அவன்தான். அவன் என்ன லவ் பண்றதும் எனக்கு தெரியும். அவனா வந்து சொல்லுவான்னு நெனைச்சேன். அது இது வரைக்கும் நடக்கல. இன்னிக்கி அவன் சொல்லலைனாலும் நான் சொல்லிடனும்னு முடிவு பண்ணிட்டேன். இப்ப ப்ராப்ளம் அது இல்ல. அருண். அருண் எங்க கம்பெனில ஜாயின் பண்ணி ஒரு மாசந்தான் ஆகுது.
“இப்போ எதுக்கு என்ன ஆபிஸ்கே கூட்டிட்டு வந்திருக்க?” நான்
“இங்கதான் யாரும் இருக்க மாட்டாங்க அதான். பாரு செக்யூரிட்டி கூட இன்னிக்கி இல்ல..
“சரி உனக்கு என்ன வேணும்?” நான்
“நீதான். ஐ லவ் யு. நீ என்ன லவ் பண்றியா?” அருண்
“நான் ராமதான் லவ் பண்றேன். இத உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன். அப்புறம் ஏன் என்ன தொல்ல பண்ற” நான்
“இதப்பாரு! நீ ராம் கூட சுத்துறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. அவன் அவ்ளோ நல்லவன் இல்ல. உனக்கு சொன்னா புரியாதா” அருண். அருணின் கைகள் என்னை வலுவாக பிடித்திருந்தது
“நான் போகனும். என்ன விடு”
“நீ இங்க இருந்து போகமுடியாது. எனக்கு பதில் சொல்லிட்டு போ” அருண்.
“சொல்லலைனா என்னடா பண்ணுவ. மொதல்ல அவ மேல இருந்து கைய எடு” ராம்.
“சத்யா! நீ சொல்லு. இவன் இன்னொரு வார்த்த பேசினான்னா அப்புறம் நடக்கறதே வேற” அருண்
“என்னடா நடக்கும்…நீ என்ன பெரிய புடுங்கியா?…….”ராம்
என் முன்னால் அவர்கள் இருவரும் அடித்துக்கொண்டனர். “ஹே ப்ளீஸ் ப்ளீஸ் சண்ட போடாதீங்க ப்ளீஸ்”
நான் அவர்கள் சண்டையை தடுக்க முயல்கையில்
தொபீர்ர்ர்ரர்ர்ர் !!!!!!!!!!!!
“ராம்ம்மம்ம்மம்ம்ம்ம்” நான்
“நீ இன்னும் தூங்கலையா?” ராம்
“இல்ல! தூக்கம் வரல. உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சி. அதான் வந்தேன்” நான் ராமின் தோளில் சாய்ந்து கொண்டேன்.
“ராம்! நீ யாரையாவது லவ் பண்றியா?”
“ஆமாம். ஒரு ஆறு மாசமா” ராம்
“கண்டிப்பா என்ன இல்லஇல்ல!” நான்
“எப்படியெல்லாமோ சொல்லனும்னு நெனைச்சேன். இந்த நேரத்துல சொல்ல வச்சிட்டியே” ராம்
“உங்க சண்டைய நிறுத்ததான் அவன கட்டையால அடிச்சேன். ஆனா அவன் கீழ விழுந்து செத்துபோவான்னு நான் சத்யமா நெனைக்கல. ஒரு கொலைபண்ண பாவத்தோட என்னால உன்னோட வாழ முடியாது ராம். என்ன மறந்திரு” நான்
“ஹே! இதுக்கு போய் ஏன் அழற. அதான் யாரும் பாக்கல இல்ல. அப்புறம் ஏன் கவலைப்படற. நீ எதைபத்தியும் கவலைப்படாத. நான் பாத்துக்கறேன். நீ போயிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. நாம நாளைக்கு பேசலாம். அப்புறம் இன்னொரு விஷயம். இதப்பத்தி யார்கிட்டயும் பேசாத” ராம்.
ராம் எனக்கு ஆறுதல் கூறினாலும் என்னால் அங்கு நடந்ததை மறக்க முடியவில்லை.
Story by Ins. Manohar/Manohar’s story
Feb 14 2011 12.00 am
“உங்களுக்கெல்லாம் கல்யாணம் எதுக்கு? வீட்ல ரெண்டு பேரு இருக்கோம்னு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா? எங்க அப்பா அப்பவே சொன்னாரு போலீஸ் மாப்ள வேண்டாம்னு. நான்தான் உங்கள கட்டிக்க ஒத்த கால்ல நின்னேன். உங்களுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா” அமுதா
“என் வேல அப்படிம்மா. நான் என்ன பண்ண. அபி தூங்கியாச்சா?” நான்
“ஹ்ம்ம். உங்ககிட்ட ஏதோ பேசனும்னு சொன்னா. நீங்க சீக்கிரம் வாங்க” அமுதா.
இவ்வளவு வசவுகளை வாங்கியதும் நான் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமான வேளையில் என் கைபேசி ஒலித்தது.
“சார்! நான் பாலாஜி பேசறேன். இங்க ஒரு டெத்”
“என்ன ஆக்சிடென்டா” நான்
“இல்ல சார். சூசைட் அட்டெம்ப்ட் மாதிரி தெரியுது. ஆறாவது மாடியில இருந்து விழுந்திருக்கான். ஆனா அவன் நெஞ்சுலயும், …………யும் யாரோ சுட்டிருக்காங்க” பாலாஜி
“சரி! நான் இதோ வரேன். அவங்க பேமலிக்கெல்லாம் இன்பார்ம் பண்ணிடு. பாடிய யாரும் டச் பண்ண வேண்டாம்” நான் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தேன்.
அருணின் நண்பர்களை விசாரித்ததில் சத்யா என்றொரு பெண்ணின் பெயர் அடிபட்டது. நான் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன்.
Feb 14 2011 5.00 am
நான் சத்யாவின் வீட்டை அடைந்தபோது…………… அவள் வீட்டின் முன் கூட்டமாக இருந்தது.
“என்ன ஆச்சுன்னு தெரியல. இந்த பொண்ணு திடீர்னு தூக்கு மாட்டிகிட்டா. இந்த காலத்துல அக்கம்பக்கத்துல என்ன நடக்குதுன்னே தெரியல” இரண்டு பெண்கள் வெளியே பேசிக்கொண்டிருந்தனர்.
சத்யாவின் உடல் ஹாலில் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. நான் ஒரு போலீஸாக அங்கே சென்றிருந்தாலும், என்னால் ஒரு அதிகாரியை போல் செயல்பட முடியவில்லை.
“கவலைபடாதீங்க சார், உங்க நிலைமை எனக்கு புரியுது. இந்த விஷயம் வெளிய வராம நான் பாத்துக்கறேன்” நான் சத்யாவின் தந்தையிடம் ஆறுதல் கூறினேன். அங்கேதான் அவனை பார்த்தேன். நேற்றிரவு ப்ரண்ட்ஐ பிக்கப் செய்யப்போவதாக கூறியவன். ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.
“உன் பேர் என்ன?” நான்
"ராம்"
“நேத்து யார பிக்கப் பண்ண போன?” நான்
“சத்யாவ”
“சோ, சம்பவம் நடந்த எடத்துல நீ இருந்திருக்க. யாரு அருண சுட்டது?” நான்
“சார்! என்கிட்டே எதுவும் கேக்காதீங்க. எனக்கு தெரியாது.
“உனக்கு தெரியும். சொல்லு! அருண சுட்டது யாரு?” நான்.
அவன் திடீரென என் பிஸ்டலை எடுத்து தன் நெற்றிபொட்டில் வைத்தான்.
“Mr. raam. Give me the pistol…..don’t shoot….. don’t shoot…..”நான்
டுமீல்…………..
கண்ணிமைக்கும் வேளையில் ராம் பிணமாகியிருந்தான். அருணை சுட்டது யார் என்பது எனக்கு கடைசி வரை தெரியாமலே போனது.
Feb 14 2011, 05.00Pm
“ஆறாவது மாடில இருந்து விழுந்தும் அவன் சாகலடா . அதான்டா அவன சுட்டேன்” ரவி
“சரிடா! அதுக்கு எதுக்கு அங்க சுட்ட?” கார்த்திக்
“அவன எல்லாம் அங்கதான் சுடனும். சரி விடு. இந்த பிஸ்டல் என்கிட்டே இருக்கட்டும். திருப்பி கொண்டுபோய் வச்சி நீ மாட்டிக்காத” ரவி
“மச்சி! ஒரு வேல சத்யாவும், அந்த பையனும் பாத்திருந்தாங்கன்னா?” கார்த்திக்

Nice ya..
ReplyDeleteU r climbing on the success ladder!!!.
@raghu : Tnx da.....
ReplyDeleteGood Start... I liked it.. :)
ReplyDeletesuper...Virumandi type-la irukku...illa Rashomon-nu sollanumaa...
ReplyDeletewhatever...this is nice..