படம் : அப்பாவி
Mark : *****(5/5)
IMDB Rating : 9.999
ஹைலைட்: படத்தில் வரும் பன்ச் டயலாக் மற்றும் வசனங்களை சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் (ஒரு ஆட்டோக்கு ஒரு டயலாக்) எழுதினால் வசனங்கள் மிஞ்சும்.
கதை
முதல் காட்சியில் ஒரு சின்னபையன் கொலை செய்கிறார். இரண்டாவது காட்சியில் சக மாணவியை கிண்டல் செய்யும் நண்பர்களை பன்ச் டயலாக் மூலம் திருத்துகிறார்.
“அழகா இருக்க பூவெல்லாம் வாசமா இருக்கறதில்ல. வாசமா இருக்கற பூவெல்லாம் அழகா இருக்கறதில்ல” அவர் இப்படி பேசும்போது எதிரில் இருப்பவனை எட்டி மிதிக்கவேண்டும்போல் தோன்றுகிறது.
மூன்றாவது காட்சியில் பாட்டு பாடுகிறார். ஓ! அப்ப அவர்தான் ஹீரோவா. ஹீரோவை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்க்குள் மூன்று நான்கு கொலைகள் நடந்துவிடுகிறது. ஹீரோவை மிகவும் நல்லவராக காட்டுவதற்காகவே ஒரு பெண்ணிற்கு கருப்பு பெயின்ட் அடித்து கதையின் இருபதாவது நிமிடத்தில் சாகடிக்கிறார்கள்
பகலில் மாணவனாகவும் இரவில் எமனாகவும் வாழ்கிறார். தப்பு யார் செய்தாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் சாகடிக்கிறார். MLA வை சாகடிக்கிறார். MP யை சாகடிக்கிறார்(அவங்களுக்கெல்லாம் செக்யூரிட்டியே இல்லையா?) ஹைதராபாத்தில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதியை மறுநாளே பார்த்தசாரதி கோயில் குளத்தில் கண்டுபிடித்து கொல்கிறார். எல்லாரையும் கொல்லும்முன் அவர்களை பேசவிட்டு படம் எடுத்து தமிழ்நாட்டுக்கே MMS அனுப்புகிறார். MMS எப்படி செல்கிறது என்பதை காட்ட கிராபிக்ஸ் வேற செய்திருக்கிறார்கள்.
இவர் இப்படியென்றால், ஹீரோயின் வரும் காட்சிகள் மிகவும் கொடுமை.ஹீரோயின் படம் முழுக்க பேசுவது நாலே நாலு டயலாக். ஆம்! நீங்கள் நினைத்தது போல் அவர் வில்லனின் மகளே.
1. ஹாய்! ஐ அம் ரம்யா
2. பாரதி ஐ லவ் யு
3. பாரதி ஐ லவ் யு(இந்த டைம் டூயட்)
ஹீரோயின்க்கு காதல் எதற்கு வருகிறதென்று அவருக்கும் தெரியவில்லை. படம் பார்க்கும் நமக்கும் தெரிவதில்லை. ஹீரோயின் பேசும் கடைசி டயலாக் கொஞ்சம் பெருசு(ரெண்டு லைன்) என்பதால் எல்கேஜி பொண்ணு போல் மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்(கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்). படத்தில் இவர்கள் ரெண்டு பேரையும் தவிர இருப்பது காமெடி(அப்டி வேற ஒன்னு இருக்கா?). காமெடிக்காக யாரும் மெனக்கெடவில்லை. நீங்கள் மொபைல் வாங்கிய காலத்திலிருந்து உங்களுக்கு வந்த sms களை நினைவில் வைத்திருந்தால் அதுவே படத்தின் காமெடி ட்ராக். இதையாவது பொறுத்துக்கொள்ளலாம் என்றால், படத்தில் வரும் எல்லோரும் குறைந்தது ஒரு பன்ச் டயலக்காவது பேசுகிறார்கள். உதாரணம்
“உங்களுக்கு நீதிதான் தெரியும். எங்களுக்கு நீதிபதியே தெரியும்”
“இப்பெல்லாம் கொலை பண்றவந்தான்டா ஹீரோ”
"நீங்கெல்லாம் சொந்த பிரச்சனைய சமுதாய பிரச்சனையா பாக்குறீங்க. ஆனா அவன் சமுதாய பிரச்சனைய சொந்த பிரச்சனையா பாக்குறான்"
இதையெல்லாம் விட படத்தில் இன்னொரு முக்கியபுள்ளியாக ஹீரோவின் அம்மா. முதல் பாதியில் கலெக்டராக அலப்பறை செய்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதியின் மனைவியை அழைத்து “உங்க புருஷனுக்கு விரோதி யாராவது இருக்காங்களா?” என்று கேட்கிறார்(என்ன விளையாட்டு இது?). இவர் செய்யும் அலப்பறையில் அரசியல்வாதிகள் இவரிடம் MMS கொலைகாரனை கண்டுபிடிக்க சொல்கிறார்கள். ஆனால் இவர் அதை விட்டுவிட்டு மகனுக்கு இட்லி, வடை, மற்றும் முறுக்கு மட்டுமே சுடுகிறார்.
ஆனால் இவர் க்ளைமாக்சில் கொலைகாரனை கண்டுபிடிப்பது உலக சினிமா வரலாற்றில் முதல் முறை.3GP வீடியோவை ஓடவிட்டு ஜூம் செய்தால் செத்தவனின் கண்களில் கொலை செய்தவனின் முகம் தெரிகிறது. என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு.படத்தின் முடிவும் உலக சினிமா வரலாற்றில் புதிய முயற்சி. பாடல்களை நான் பார்க்கவில்லை. எனவே அதைப்பற்றி நோ கமெண்ட்ஸ்
இயக்குனர் சொல்லவந்தது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால் நம்மால்தான் எதையும் நம்பமுடியவில்லை.
பி.கு
படத்தோட ட்ரெய்லர் கூட எங்களால பாக்கமுடியலன்னு சொல்றவங்க எல்லாம் படத்த முழுசா பாத்த என் நிலைமையை கொஞ்சம் நெனச்சி பாருங்க.ப்ளீஸ்
Saturday, May 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
Followers
About Me
Blog Archive
Labels
- Case study (1)
- cinema (1)
- comedy (7)
- engagement (1)
- Father (1)
- how to pickup girls (1)
- love (4)
- Movie Review (1)
- romantic comedy (1)
- Short film (1)
- suspense (3)
- vadai poche (1)
- அழகியல் (1)
- சும்மா (1)
- மக்கு ஸ்டுடண்ட் (1)
No comments:
Post a Comment