Sunday, July 10, 2011

அழகியல்


துர்(தேவதை) அதிர்ஷ்டம்


எந்த பெண்ணிடமும் என் காதலை சொன்னாலும்
எனக்காகவே காத்திருக்கிறது ஒரு அழகிய பதில்
"ஹலோ! நான் கமிட் ஆயிட்டேன்"
 
 
 
வெளிச்சம்
இருட்டுக்கு வெள்ளையடித்தாய்!
என் இதயத்தை கொள்ளையடித்தாய்
 
 
 
அழகியல்

கவிஞர்களின் அரவணைப்பில் 
அழகாகும் மொழியைப்போல,
உன் அரவணைப்பில் 
அழகாகிறேன் நான்
 
 
 
மறு(ப்பு) முத்தம்

ஒரு கன்னத்தில் முத்தம் தந்ததும்
மறுகன்னத்தையும் காட்டுவாய் என காத்திருக்கின்றேன் நான்
ஆனால் நீயோ என்னை ஏமாற்றும் வகையில் சொல்கிறாய்
"ச்சி போ"






தீண்டாமை

'கேர்ள் ப்ரண்ட் வைத்திருப்பது ஒரு பாவச்செயல்!
கேர்ள் ப்ரண்ட் வைத்திருப்பது ஒரு பெருங்குற்றம்!
கேர்ள் ப்ரண்ட் வைத்திருப்பது ஒரு மனிதத்தன்மையற்றசெயல்'
என்னை பொறுத்தவரை!
 

No comments:

Post a Comment

Powered by Blogger.

Followers

About Me